மேளதாளம் முழங்க வரவேற்கப்பட்ட கால்நடைகள்

2 mins read
cda376b6-5460-4b6e-a630-66363e6948fb
‘பொலி’ @ கிளைவ் ஸ்திரீட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால்நடைகள். - படம்: சுந்தர நடராஜ்

பொங்கல் திருவிழாவின் முக்கிய அங்கமாகத் திகழும் மாடுகள் மேளதாளம் முழங்க, தேக்கா பகுதிக்கு வந்து சேர்ந்தன.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் பொங்கல் கொண்டாட்டங்களின் வரிசையில் ஆடு, மாடுகள் அழைத்து வரப்படுவது வழக்கம்.

அவ்வகையில் இவ்வாண்டும் ஜனவரி 9ஆம் தேதி, பிற்பகலில் ஆடு, மாடுகள் வந்தடைந்தன. மாலை 5 மணியளவில் தவில் இசை, பாரம்பரிய நடனங்களுடன் மாடுகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐந்து மாடுகள், இரு ஆடுகள் உள்ளிட்ட இக்கால்நடைகள், ஜனவரி 18 வரை, கிளைவ் ஸ்திரீட்டில் உள்ள ‘பொலி’ வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். மேலும் ஜனவரி 16ஆம் தேதி மாலை 4 மணியளவில், அங்குக் கோலாகலமாக மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் லி‌‌‌ஷா தெரிவித்தது.

தமது பெற்றோருடன் மாடுகளைப் பார்த்து ரசித்த மாணவி சஹானா ஆராத்யா.
தமது பெற்றோருடன் மாடுகளைப் பார்த்து ரசித்த மாணவி சஹானா ஆராத்யா. - படம்: லாவண்யா வீரராகவன்

“நமக்கு மாடுகள் பால் தருகின்றன. விவசாயம் செய்ய உதவுகின்றன. அவற்றுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று என் தாயார் சொன்னார். அதற்காக வந்துள்ளோம்,” என்றார் பொங்கோல் வியூ தொடக்கப்பள்ளி மாணவி சஹானா ஆரத்யா.

தமது தாயார் அவரின் சிறு வயது கதைகள் குறித்துப் பகிர்ந்துள்ளதாகவும், அவற்றை நேரில் பார்ப்பது மகிழ்ச்சி என்றும் சொன்னார் சஹானா.

சகோதரர்கள் தரண் செல்வா சுரேந்திரன், ஹிரேன் சந்திரா சுரேந்திரன்.
சகோதரர்கள் தரண் செல்வா சுரேந்திரன், ஹிரேன் சந்திரா சுரேந்திரன். - படம்: லாவண்யா வீரராகவன்

தீபாவளியைப் போலவே பொங்கலும் நாம் கொண்டாடும் முக்கிய விழா. காளைகள் தங்கள் வலிமை மூலமும் பசுக்கள், ஆடுகள் பால் தருவதன் மூலமும் நமக்கு துணையாக இருக்கின்றன. அவற்றைப் பார்ப்பது முதன்முறை. மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் தொடக்கநிலை ஒன்றில் பயிலும் மாணவர் ஹிரேன் சந்திரா சுரேந்திரன்.

பொங்கல் குறித்த தகவல்களை ஆவலுடன் கேட்டறிந்த மாணவி தாஹிரா ஷெரின்.
பொங்கல் குறித்த தகவல்களை ஆவலுடன் கேட்டறிந்த மாணவி தாஹிரா ஷெரின். - படம்: லாவண்யா வீரராகவன்

இந்தியர்கள் தீபாவளி கொண்டாடுவது தெரியும். பொங்கல் குறித்து அறிவது முதல் முறை. இந்திய நண்பர்களுடன் இதுகுறித்துப் பகிர்வேன்,” என்றார் தாஹிரா ஷெரின்.

ஜனவரி 16ஆம் தேதி மாலை 4 மணியளவில், அங்குக் கோலாகலமாக மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் லி‌‌‌ஷா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்