தொடக்கப்பள்ளியில் காலெடுத்து வைப்பது பெற்றோர், பிள்ளை இருவருக்கும் அச்சத்தை அளிக்கும் ஒரு அனுபவம்.
அச்சத்தை நிர்வகித்து முதன்முதலாக தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் கருத்தில் கொள்ளக் கூடிய 10 குறிப்புகளை மாணவர் முரசு ஆராய்கிறது.
நேரத்தை வகுத்தல்:
ஓய்வு, வீட்டுப்பாடம், விளையாட்டு மற்றும் உணவுக்கான தினசரி நேர அட்டவணைகளை அமைக்கவும். தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு நிலையான, சுலபமான வழியில் பள்ளி நேரம் ஒதுக்கப்படுவதால் இந்தப் பழக்கம் மிக உதவியாக இருக்கும்.
உதவி கேட்க ஊக்குவித்தல்:
தொடக்கப்பள்ளி வகுப்புகளில் மாணவர்கள் அதிகம் உள்ளனர். இதனால் சில சமயம் கை உயர்த்தி உதவி கேட்க பிள்ளைகளிடையே தயக்கம் ஏற்படலாம் என்பதால் ஆசிரியர்கள் அல்லது பள்ளியில் பணியாற்றுபவர்களிடம் உதவி கேட்க அவர்களை ஊக்குவிக்கவும்.
சிறிய வேலைகளில் ஈடுபடுத்தவும்:
பள்ளிப் பையை எடுத்து வைப்பது, புத்தகங்களுக்குப் பெயர் எழுதுவது போன்ற சிறு வேலைகளுக்கு பிள்ளைகளின் உதவியை நாடவும். இது பொறுப்புணர்வை உருவாக்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஒன்றிணைந்து கற்பது:
புத்தகம் படிப்பது, கணக்குக் கேள்விகளை மேற்கொள்வது, தமிழில் பேசுவது போன்ற கற்றல் நடவடிக்கைகளை அவர்களுடன் இணைந்து செய்யலாம்.
பணம் மற்றும் நேரம்:
தொடக்கப்பள்ளியில் பணம் எண்ணுவது, நேரம் சொல்வது மிக முக்கியமான திறன்கள். எண் கடிகாரத்தைப் பார்த்து நேரம் சொல்வதும் $10 வரை பணத்தை எண்ண பிள்ளைகள் கற்றுக் கொள்ளலாம்.
சமாளிக்கும் திறன்களை ஊக்குவித்தல்:
விளையாட்டின் மூலம் பகிர்தல், மாறி மாறி வீட்டில் உள்ள சிறு பணிகளை செய்தல் மற்றும் குழுவாகப் பணியாற்றுதல் ஆகியவற்றைப் பயிற்சி செய்யலாம்.
பள்ளியைப் பற்றி நேர்மறையாகப் பேசுங்கள்
தொடக்கப்பள்ளி செல்லும் பிள்ளையின் இதயத்தில் பயத்தை விதைக்காமல் பள்ளியில் நண்பர்களைச் சந்திப்பது, விளையாடுவது போன்ற சுவாரசியமான நன்மைகளைப் பற்றி எடுத்துரைப்பது நல்லது.

