பாண்டாக் கரடியைப் பிடிக்காத சிறுவர்களைக் காண்பது அரிது.
இந்த விழாக்காலத்தில் குடும்பமாகச் சென்று கொண்டாடும் விதமாக, டெளன்டவுன் ஈஸ்ட் ஒரு பாண்டா கேளிக்கை விழாவாக உருமாறி இருக்கிறது!
நவம்பர் 15, 2024 முதல் பிப்ரவரி 12, 2025 வரை, சிறுவர்கள் 75 மீட்டர் மூங்கில் காட்டுப் புதரில் விளையாடி மகிழலாம். அனுமதி இலவசம்!
கதையோடு இணைந்த புதிர்
சிறுவர்களின் அபிமான பாண்டாக் கரடி தன் குடும்பத்தினரைத் தேடிவருகிறது. மாயாஜால மூங்கில் சுவடியில் எழுதியிருப்பதைப் படித்து, பாண்டா தம் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க சிறார்கள் உதவவுள்ளனர்!
இப்புதிரில் 12 வகையான சுவாரசிய நடவடிக்கை அங்கங்கள் உள்ளன. ஒவ்வோர் அங்கத்திலும், பாண்டாக்கள், மூங்கில்கள் சார்ந்த பல புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ளலாம்.
சிறார்கள் தாம் விரும்பியதைக் கிறுக்குவதற்கு சுவர், மூங்கில் இசைக்கருவி போன்றவைகளும் அங்கு உண்டு. கண்ணாடிப் புதிர், பந்து விளையாட்டு, புதிய சவால்கள் என பலவற்றையும் எதிர்பார்க்கலாம்.
தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சகோதரி என பாண்டாவின் குடும்பம், சிறார்களுக்குக் குடும்ப அன்பின் வலிமையையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும்!
ஆனால், அதுமட்டுமல்ல சிறுவர்களே! பாண்டா உருவப்பொம்மையை நேரில் சந்தித்து, அழகழகான வடிவங்களிலுள்ள மிட்டாய்களைப் பெற்றுக்கொள்ள மறவாதீர்கள். பாண்டா பொம்மையுடன் புகைப்படங்களை எடுத்து மகிழுங்கள்.
தொடர்புடைய செய்திகள்
கிறிஸ்துமஸ் பாடல்கள், இசையுடன் கிறிஸ்துமஸ் நேரடி நிகழ்ச்சிகளைக் கண்டு பண்டிகை உணர்வைக் கொண்டாடுங்கள்!
டௌன்டவுன் ஈஸ்ட் பேரங்காடிக் கடைகளிலும் ‘குங்ஃபூ பாண்டா’ திரைப்படம், பாண்டா சுவர் ஏறும் அனுபவம், ஓவிய வகுப்புகள், பாண்டா மிட்டாய், மூங்கில் போத்தல்களில் தேநீர் என பலவும் காத்திருக்கின்றன.