கடந்த 41 ஆண்டுகளாக கல்வித் துறையில் பயணித்து வரும் திருமதி வீரராஜு தேவிகா, 62, புதிய உத்திகளை வைத்து மாணவர்களின் கற்றலை மேம்படுத்தி வருகிறார்.
சி. எச். ஐ. ஜே. தொடக்கப்பள்ளியில் (தோ பாயோ) தலைமை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் அவர் வகுப்பறைக்கு அப்பாற்பட்டு கற்றலை சுவாரசியமாக்க மின்னிலக்க கருவிகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
“தொடக்கப்பள்ளிதான் ஒரு மாணவருக்கு அடித்தளமாக இருக்கிறது. மாணவர்கள் பேச்சுத் தமிழில் பேசவும் நான் ஊக்குவித்து வருகிறேன். நாடகம் மூலம் கற்றலை இனிமையாக்குவது போன்ற உத்திகளை நான் பயன்படுத்துவேன். இந்த விருதை என் மாணவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் திருமதி தேவிகா.