தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்கு வாழ்த்துகள்

2 mins read
d0125daa-247a-42ef-a3d4-ee8d26c913b7
மக்கள், தேசிய தின முன்னோட்டக் காட்சியின்போது ராணுவ வாகன அணிவகுப்பை பார்வையிடுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் - உலக வரைபடத்தில் ஒரு சிறு புள்ளியாக இருக்கும் நம் நாடு, உலக அரங்கில் ஒற்றுமை, அமைதி, பாதுகாப்பு, கல்வி, பசுமை, கலாச்சாரம் ஆகிய அனைத்திலும் வல்லரசாக சிறந்து விளங்கும் நாடு. ஒவ்வொரு குடிமக்களின் கடந்த காலத்தைப் போற்றியும், எதிர் காலத்தை நோக்கியும் கொண்டாடும் 60வது தேசிய தின விழாவிற்கு என் அன்பான நல்வாழ்த்துகள்!

மேகா, தொடக்கநிலை 3

சிங்கப்பூரில் தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தன்று வானில் வண்ணமயமான வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இதைப் பார்க்க மக்கள் கூட்டம் அலை கடல் என திரளும்.

நம் கண்களுக்கு விருந்தாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் மிக பிரம்மாண்டமாக நடக்கும். ஏனெனில் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துகள்.

சுஷ்மா, தொடக்கநிலை 3

சிங்கப்பூரின் வயது 60!

சிங்கை தனது 60ஆம் ஆண்டு தேசிய தினத்தை கொண்டாட இருக்கிறது!

அழகான அணிவகுப்பு முதல் கண்கவர் வாணவேடிக்கை வரை பல அம்சங்களை வரும் ஆகஸ்ட் 9 அன்று நாம் எதிர்பார்க்கலாம்!

இந்த சிங்கப்பூரை இத்தனை அழகாக உருவாக்கிய நம் முன்னோர்களின் உழைப்புக்கும், நம்மை பாதுகாக்கும் வீரர்களின் தியாகத்துக்கும், இந்நன்னாளில் வீர வணக்கம் செலுத்துவோம்!

ஹர்ஷினி, தொடக்கநிலை 3

எனக்கு சிங்கப்பூர் மிகவும் பிடித்த நாடு. ஏனென்றால் நான் இங்கு மிகவும் பாதுகாப்பாக வாழ்கிறேன். நான் என் பல இன நண்பர்களுடனும் அண்டை வீட்டாரோடும் சேர்ந்து சீனப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், நோன்புப் பெருநாள், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளை ஒற்றுமையாகக் கொண்டாடுவேன். என்னை மிகவும் கவர்ந்த சிங்கைக்கு என் இனிய அறுபதாவது பிறந்தநாள் வாழ்த்துகள்!

தேவ தர்ஷனா, தொடக்கநிலை 3

சிங்கப்பூர் தேசியதினம் என்றாலே சிறப்பு தான். அதிலும் எனக்கு இன்னும் அதிக சிறப்பு என்னவென்றால் நம் நாடு பிறந்தநாள் கொண்டாடும்போது நானும் என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவேன். அன்றைய தினம் நான் பிறந்ததால் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

சிறு மீன்பிடி கிராமமாக தொடங்கிய சிங்கப்பூரின் கதை வெற்றிக் கதையாக மாறியுள்ளது. அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயல்படுவதே காரணம். பல இன மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம். உலக அரங்கில் தொடர்ந்து வெற்றி பெறுவோம். அனைவருக்கும் என் இனிய தேசிய தின நல்வாழ்த்துகள்!

தன்ஷிகா, தொடக்கநிலை 3

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் சிங்கப்பூரர்கள் அனைவரும் தேசிய தினத்தன்று சிவப்பு வெள்ளை ஆடைகளை அணிவோம். இந்த ஆண்டு பாடாங் சுற்றுபுற கலைப்படைப்புகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாடாங்கில் உள்ள வாணவேடிக்கைகள், வண்ண விளக்குகளைக் காண எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றை நேரில் காண ஆர்வமாக இருக்கிறேன். அனைவருக்கும் என் இனிய தேசிய தின வாழ்த்துகள்!

துவாரஹா, தொடக்கநிலை 3, புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்