தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேராசை பெருநஷ்டம்

2 mins read
3583bbe2-c816-4e75-9fb6-7b6119490201
பருந்து ஆட்டை தூக்கிச் செல்வதைப் பார்க்கிறது காகம். - படம்: செயற்கை நுண்ணறிவு

ஒருநாள் காகம் இரை தேடி அலைந்தது. அன்று அதற்கு எந்த ஒரு இரையும் கிடைக்கவில்லை. அதனால் அது களைத்துப்போய் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தது. அப்போது வானத்தில் ஓர் ஆட்டுக்குட்டி பறப்பதுபோல் தெரிந்தது. ‘என்ன இது அதிசயம்! செம்மறி ஆடு வானில் பறக்கிறது?’ என்று பார்த்தால் அதை உற்றுப் பார்த்தபோதுதான் அந்த ஆட்டை கழுகு ஒன்று தூக்கிச் செல்வதைப் பார்த்தது கழுகு.

எந்த ஆட்டைப் பிடிக்கலாம் என்று பார்க்கிறது காகம்.
எந்த ஆட்டைப் பிடிக்கலாம் என்று பார்க்கிறது காகம். - படம்: செயற்கை நுண்ணறிவு

நாமும்தான் நன்றாகப் பறக்கிறோம். மேலும் நான் ஓர் அறிவான பறவை என்று மனிதர்கள் புகழ்கிறார்கள். நமக்கு ஏன் இந்த சிந்தனையே வரவில்லை? நாம் ஏன் இந்த ஆட்டை தூக்கக்கூடாது. ஓர் ஆட்டை தூக்கினால் ஒரு மாதத்திற்கு வைத்து உண்ணலாமே! அலைய வேண்டியது இல்லையே! சிரமம் இல்லாமல் இருந்த இடத்திலேயே உண்டு, உறங்கி மகிழலாமே என்ற முடிவுக்கு வந்தது காகம்.

ஒரு பெரிய ஆட்டின்மேல் அமர்ந்தது காகம்.
ஒரு பெரிய ஆட்டின்மேல் அமர்ந்தது காகம். - படம்: செயற்கை நுண்ணறிவு

உடனே காகமும் ஓர் ஆட்டைப் பிடிக்க முடிவு செய்தது. ‘கழுகு தூக்கிச் சென்றது சிறிய ஆட்டுக்குட்டி! கழுகு மூளை இல்லாமல் தூக்கிச் சென்றுவிட்டது. நாம்தான் அதிபுத்திசாலி ஆயிற்றே! நல்ல பெரிய கொழுத்த ஆட்டை தூக்க வேண்டும்,’ என்று முடிவு செய்து ஓர் பெரிய ஆட்டின் மேல் போய் அமர்ந்தது. உடன் தன்னுடைய அலகால் (மூக்கு) அந்த ஆட்டின் கழுத்தைக் கொத்தத் தொடங்கியது.

ஆட்டை விட்டு பறக்க முயல்கிறது காகம்.
ஆட்டை விட்டு பறக்க முயல்கிறது காகம். - செயற்கை நுண்ணறிவு

ஆட்டின்மேல் அமர்ந்து தன் அலகால் தொடர்ந்து கொத்திக்கொண்டு இருந்தது. ஆட்டின் கழுத்தில் ரத்தம் வழிந்ததே தவிர காகத்தால் அந்த ஆட்டை அசைக்கக்கூட முடியவில்லை. ‘சரி. இது பெரிய ஆடு என்பதால் நம்மால் முடியவில்லை. கழுகைப்போல நாமும் சிறிய ஆட்டுக்குட்டியைத் தூக்கலாம் என்று முடிவெடுத்து பறக்க முயன்றது. அதனால் முடியவில்லை. அதன் கால்கள் ஆட்டின் உரோமத்தில் நன்றாக மாட்டிக் கொண்டன.

இடையர் காகத்தை தன் பிள்ளையிடம் கொடுக்கிறார்.
இடையர் காகத்தை தன் பிள்ளையிடம் கொடுக்கிறார். - படம்: செயற்கை நுண்ணறிவு

காகத்தால் செம்மறி ஆட்டின் உரோமத்தில் இருந்து கால்களை எடுக்க முடியவில்லை. கால்களின் நகங்கள் உரோமத்தில் நன்றாக மாட்டிக்கொண்டன. ஆடு மேய்க்கும் இடையர் அருகில் வருவதைப் பார்த்ததும் பயந்துபோய் அமர்ந்து இருந்தது. அதன் அருகே வந்த இடையர், காகத்தின் கால்களில் கயிற்றைக் கட்டி அதனை அவரின் பிள்ளைகளிடம் விளையாடக் கொடுத்தார்.

இடையர் தினமும் தன் பிள்ளைகளுடன் காகத்தை வைத்து விளையாடினார்.
இடையர் தினமும் தன் பிள்ளைகளுடன் காகத்தை வைத்து விளையாடினார். - படம்: இயற்கை நுண்ணறிவு

கழுகு பெரியது, அதனால் அது ஆட்டைத் தூக்க முடிந்தது. ஆனால், காகம் சிறியது. காகம் பேராசையால் மாட்டிக்கொண்டது. அதுபோல், மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, நம்மால் முடியாத விஷயத்தைப் பேராசையோடு செய்ய முயற்சிக்கக் கூடாது.

பேராசைப்பட்டால், காக்காவுக்கு நேர்ந்தது போல் ஆபத்தில் மாட்டிக்கொள்ள நேரிடும்! ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமைகள் இருக்கும். அந்த திறமையைப் பயன்படுத்தவேண்டும்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்பறவைஆடு