தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உங்களுக்குத் தெரியுமா?

2 mins read
97e6516c-c237-44a4-b946-d2fa21063154
தண்ணீரில் மிதக்கும் பெண். - படம்: ஊடகம்

நெருப்பு மேல் நோக்கி எரிவது ஏன்?

நெருப்பு என்பது ஒரு வேதிச் செயல்பாடு. வெப்பம், எரிபொருள், ஆக்சிஜன் மூன்றும் இருந்தால்தான் நெருப்பு உண்டாகும். நெருப்பிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றல், சுற்றியுள்ள காற்றைச் சூடேற்றுகிறது. அப்போது காற்றைவிட, வெப்பக்காற்றின் எடை குறைவாக இருக்கிறது. அதனால் பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி, எடை குறைவான வெப்பக்காற்று மேல் நோக்கிச் செல்கிறது. விளக்கு, மெழுகுவர்த்தி, அடுப்பு என எதில் உருவாகும் நெருப்பும் மேல்நோக்கியே எரிகிறது. மெழுகுவர்த்தியைத் திருப்பிப் பிடித்தால்கூட, நெருப்பு மேல்நோக்கிதான் எரியும்.

நெருப்பு மேல் நோக்கி எரிகிறது.
நெருப்பு மேல் நோக்கி எரிகிறது. - படம்: ஊடகம்

நீரில் இருக்கும் ஆக்சிஜன் ஏன் எரிவதில்லை?

ஆக்சிஜன், எரிவதற்கு துணைபுரியும் வாயு. அப்படி என்றால் ஆக்சிஜன் இருக்கும் தண்ணீரை ஏன் நெருப்பை அணைக்கப் பயன்படுத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும் சேரும்போது தண்ணீர் உருவாகிறது. ஹைட்ரஜன்தான் எரியக் கூடியது. எரிய ஆரம்பித்த பிறகு அந்த வெப்பத்தைத் தக்கவைக்கக்கூடிய ஆற்றல் ஆக்சிஜனுக்கு உண்டு. எரியும் தீயின் மீது தண்ணீரை ஊற்றினால், வெப்பத்தை அது குளிர்விக்கிறது. அத்துடன் தீயைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதாவது, எரிவதற்குத் தேவையான எரிபொருளையும் எரிவதை ஊக்குவிக்கும் ஆக்சிஜன் காற்றிலிருந்து கிடைப்பதையும் தண்ணீர் தடை செய்வதால்தான் நீரின் ஒரு பகுதியாக இருக்கும் ஆக்சிஜன் எரிவதில்லை.

நெருப்பை அணைக்க நீரை ஊற்றுகிறார்கள்.
நெருப்பை அணைக்க நீரை ஊற்றுகிறார்கள். - படம்: ஊடகம்

இசைக்கு நாம் மயங்குகிறோம்

நமது மூளையில் நடக்கும் சில அற்புதமான விஷயங்களால்தான் இசை நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாம் இசையைக் கேட்கும்போது ‘டோபமைன்’ என்கிற மகிழ்ச்சி ஹார்மோனை நம் மூளை சுரக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. நாம் கேட்கும் பாடல்கள் நம் இனிமையான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. நாம் இசையைக் கேட்கும்போது தலையை ஆட்டுகிறோம், கால்களைத் தட்டுகிறோம். எனவேதான், நாம் சோகமாக இருக்கும்போதுகூட இசையைக் கேட்டால் நமக்கு மகிழ்ச்சி வருகிறது. இது நம் மூளையின் அற்புதமான செயல்பாடு.

சிறுமி இசை கேட்கிறார்.
சிறுமி இசை கேட்கிறார். - படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்
மாணவர்நீர்தீ