தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குட்டி போட்டு பால் கொடுக்கும் டால்பின் பற்றி அறிவீர்களா...?

2 mins read
a184f3f8-bb53-4b27-ade4-0fe01e7a2a47
குட்டியுடன் திமிங்கிலம். - படம்: இணையம்
multi-img1 of 2

பாலுாட்டி வகை உயிரினம் டால்பின். இதில், 30க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் பாட்டில் மூக்கு டால்பின் வினோதமானது. இது, திமிங்கில வகையை சேர்ந்தது. ஆனால், பற்கள் கோரமாக இருக்காது.

இதன் முதுகுப் பகுதி அடர் சாம்பல் மற்றும் கறுப்பு நிறங்களில் இருக்கும். வயிற்றுப் பகுதி வெள்ளையாக இருக்கும். உடல் ரப்பர் போல் வழுவழுப்பாக இருக்கும்.

இந்த விலங்கினத்தின் ஆயுட்காலம், 25 ஆண்டுகள். சராசரியாக, 8.5 அடி நீளம் வரை வளரும்.

இறால், சிறு மீன்களை உண்டு வாழும். 100 கிலோ எடை உள்ள டால்பின் ஒரு நாளில், 30 கிலோ எடையுள்ள உணவை உண்ணும்.

இதன் கர்ப்ப காலம், 12 மாதங்கள். குட்டி போட்டு பால் கொடுக்கும். குட்டியின் வால் பகுதி தான் முதலில் வெளி வரும். பிறந்தவுடன் குட்டியை நீரின் மேல்பரப்புக்கு எடுத்து சென்று, சுவாசிக்க வழி செய்யும்.

இதே முறையில்தான் கடலில் விழும் மனிதர்களை, டால்பின் காப்பாற்றி கரை சேர்க்கிறது. குட்டி, ஒன்றரை வயது வரை, தாயின் அரவணைப்பில் இருக்கும்; தாய்ப்பால் அருந்தும்.

டால்பின், சராசரியாக மணிக்கு, 20 கி.மீ., வேகத்தில் நீந்தும். 30 அடி உயரம் வரை, துள்ளிக் குதிக்கும். உடல் சூட்டை சரிவர வைத்துக்கொள்ள காற்றை சுவாசித்தே ஆக வேண்டும். எனவே, இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை, நீர் பரப்பிற்கு வரும்.

இந்தக் கடல் உயிரினம் மிகவும் அறிவுள்ளது. எளிதில், எதையும் கற்றுக்கொள்ளும். வீசும் பந்துகளை பிடிக்கும். தாவி விளையாடி வித்தைகள் செய்யும். ஒரே நேரத்தில் ஆயிரம் டால்பின்கள் வரை கூட்டமாக செல்லும்.

எப்போதும் ஒரு கண் விழித்துக் கொண்டிருக்கும். நாள் முழுதும் துாங்கினால், இறந்து விடும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ஸ்லாத் கரடி (Sloth Bear) எனப்படும் அசையாக் கரடி 

அசையாக்கரடி என்ற விலங்கை ஆங்கிலத்தில், ‘ஸ்லாத்’ என்று அழைப்பார்கள். நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும் மிகவும் மெதுவாகவே நகரும் என்பதாலும் இதை ‘அசையா’ கரடி என்று அழைக் கிறார்கள்.

பொதுவாக, 60 முதல், 80 செ.மீ., நீளம் வளரும். இதில் ஆறு இனங்கள் உண்டு. ஒவ்வோர் இனத்தைப் பொறுத்து, 8 கிலோ வரை எடை இருக்கும்.

இது பெரும்பாலும் மரத்தின் மீதுதான் காணப்படும். வாரத்திற்கு ஒருமுறை, கழிவு அகற்ற தரையில் இறங்கும்.

ஒரு நாளில், 16 முதல் 20 மணி நேரம் உறங்கும். தாவரம், பூச்சி மற்றும் பல்லியை உணவாக உட்கொள்ளும். உடல் இயக்கம், மிகவும் மெதுவாக இருப்பதால் உண்ணும் உணவுகள், செரிக்க, ஒரு மாதம் கூட ஆகும்.

குறிப்புச் சொற்கள்