தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏமாந்து அழுத சிறுத்தை

1 mins read
கிழக்கு ஆப்பிரிக்க குட்டிக் கதை
4a2ba723-02d5-4ee3-8089-3b14c0cdc80e
கொம்பு மான்கள். - படம்: ஊடகம்
multi-img1 of 2

ஒரு நாள் சிறுத்தை ஒன்று கடும் பசியுடன் உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது. அப்போது கறுப்பு, வெள்ளை நிறங்களில் இருந்த இரு கொம்பு மான்கள் அதன் கண்களின் பட்டன.

அவை மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.

சிறுத்தை சத்தம் போடாமல், ஒரு பூனைபோல் மலையடிவாரம் அருகே சென்றது. இரண்டு மான்களில் எந்த மானை வேட்டையாடி உண்ணலாம் என்பது குறித்து அது இன்னும் முடிவு செய்யாமல் இருந்தது.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்துவிட்ட மான்கள் இரண்டும் பதற்றத்துடன் தலைதெறிக்க ஓடின. பின்னர், அவை இரண்டும் வெவ்வேறு பாதைகளில் பிரிந்து ஓடின.

குறிப்பிட்ட இடத்துக்கு வந்த சிறுத்தை, ‘எந்த மானைத் துரத்தலாம்?’ என்று குழம்பி நின்றது.

பின்னர், “சரி, கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்,” என முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தியது. ஆனால், சிறுத்தைப் பிடியில் சிக்காமல் அது தொலைதூரம் ஓடி மறைந்தது.

உடனே சிறுத்தை, “அதனை தேடிக் கண்டுபிடிப்பது சாதாரண காரியமல்ல. பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது. சரி, புள்ளி மானையாவது பிடித்து உண்போம்,” என்று தீர்மானித்து அது ஓடிய திசையில் ஓடியது. ஆனால், புள்ளிமானும் அங்கிருந்து பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

‘கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போன கதையாகி விட்டதே’ என வருத்தத்துடன் அழுது புலம்பியது சிறுத்தை.

நீதி: குறித்த நேரத்தில் சரியான முடிவை விரைந்து எடுக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்