சீனப் புத்தாண்டுக் குதூகலத்தில் தந்தை, மகன்

சீனப் புத்தாண்டுக் குதூகலத்தில் தந்தை, மகன்

2 mins read
946bcd53-aa16-4e5f-ab2d-4fc5567a72ac
ஐந்து வயது சைலேஷ், தாம் செய்திருந்தக் கைவினைப் பொருளைக் கையில் பிடித்துகொண்டு தந்தையுடனு படமெடுக்கிறார். - படம்: கவிகுமார் பிரேம்குமார்
multi-img1 of 3

சீனப் புத்தாண்டு என்றாலே ஐந்து வயது சைலேஷுக்குக் கொண்டாட்டம்தான்.

சீனக் கலை, பண்பாடு ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் சைலேஷ்.

சீனப் புத்தாண்டுக்கு முந்தைய நாளன்று பிள்ளைகளுடன் சைலேஷ் விளையாடி மகிழ்வார். பள்ளியிலிருந்து முன்கூட்டியே வீட்டுக்குப் போக முடிவதால் அவருக்கு ஒரே குதூகலம்.

இந்த ஆண்டு, சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, சைலேஷ் சீனப் பண்பாட்டில் அதிர்ஷ்ட நிறமாகக் கருதப்படும் சிவப்பு ஆடையை அணிந்து, கைவினைப் பொருள்களைச் செய்து மகிழ்ந்தார்.

பின்னர், தந்தை கவியுடன் உணவகத்திற்குச் சென்று கடல் உணவு கலந்த சோற்றை ருசித்துச் சாப்பிட்டார்.

பாலர் பள்ளியில் பயிலும் சைலேஷுக்குச் சிங்க நடனம் மிகவும் பிடிக்கும்.

சிங்க நடனம் ஆடும் அவனது தந்தை கவிகுமார் பிரேம்குமார், சீனப் பண்பாட்டின் அருமை பெருமைகளை கவிகுமாருக்குக் கற்பித்துள்ளார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சிங்க நடனத்தில் பங்கேற்பார்கள்.

தன் தந்தையுடன் தானும் சிங்க நடனம் ஆடுவதில் சைலேஷுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

சீனப் புத்தாண்டின்போது சிங்க நடனத்தை சிங்கப்பூர் எங்கும் பார்க்கலாம். சிங்க நடனம் நல்லதை வரவேற்கும் சீனர்களின் பாரம்பரிய வழக்கம்.

தந்தை கவி சீனப் புத்தாண்டு காலத்தில் தமது நடனக்குழுவுடன் பல்வேறு இடங்களுக்குச் செல்வார். சிங்கப்பூரிலுள்ள பல்வேறு சமூகத்தினரின் பண்பாட்டை அறிந்து எல்லோரது கொண்டாட்டங்களிலும் ஈடுபடுவது நல்லது என்று அவர் கூறினார்.

“என் மகனுடன் பொழுதைக் கழிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சீனப் புத்தாண்டு போன்ற விடுமுறை நாள்கள், என் மகனுடன் நேரம் செலவழிப்பதற்குப் பொருத்தமாக உள்ளன,” என்று திரு கவி கூறினார்.

பிறர் பண்பாட்டை அறிவதால் புரிந்துணர்வும் பொது அறிவும் பெருகும். மற்ற இனத்தவரின் பண்பாடு பற்றி அறிந்துகொள்ள விழாக் காலம் சிறந்த நேரம்.

சிங்க நடன நண்பர்களுடன் சைலேஷ்.
சிங்க நடன நண்பர்களுடன் சைலேஷ். - படம்: கவிகுமார் பிரேம்குமார்
பதின்ம வயதில் சிங்க நடனம் கற்க தந்தை கவிகுமார் தொடங்கினார். ஆனால் மகன் சைலேஷுக்குத் தவழும் பருவத்திலிருந்தே பழக்கம்.
பதின்ம வயதில் சிங்க நடனம் கற்க தந்தை கவிகுமார் தொடங்கினார். ஆனால் மகன் சைலேஷுக்குத் தவழும் பருவத்திலிருந்தே பழக்கம். - படம்: கவிகுமார் பிரேம்குமார்
சிங்க நடனத்தில் பொழுதுபோக்கிற்காக ஈடுபடும் சைலேஷ், சீனத் தாள இசைக்கருவிகளையும் வாசிக்கப் பழகுகிறார்.
சிங்க நடனத்தில் பொழுதுபோக்கிற்காக ஈடுபடும் சைலேஷ், சீனத் தாள இசைக்கருவிகளையும் வாசிக்கப் பழகுகிறார். - படம்: கவிகுமார் பிரேம்குமார்
-
குறிப்புச் சொற்கள்