சீனப் புத்தாண்டுக் குதூகலத்தில் தந்தை, மகன்

சீனப் புத்தாண்டுக் குதூகலத்தில் தந்தை, மகன்

1 mins read
946bcd53-aa16-4e5f-ab2d-4fc5567a72ac
ஐந்து வயது சைலேஷ், தாம் செய்திருந்தக் கைவினைப் பொருளைக் கையில் பிடித்துகொண்டு தந்தையுடனு படமெடுக்கிறார். - படம்: கவிகுமார் பிரேம்குமார்
multi-img1 of 2

சீனப் புத்தாண்டு என்றாலே ஐந்து வயது சைலேஷுக்குக் கொண்டாட்டம்தான். சீனக் கலை, பண்பாடு ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறான்.

பாலர் பள்ளியில் பயிலும் சைலேஷுக்குச் சிங்க நடனம் பிடித்துள்ளது. சிங்க நடனம் ஆடும் அவனது தந்தை கவிகுமார் பிரேம்குமார், சீனப் பண்பாட்டின் அருமை பெருமைகளைச் சிறுவனுக்குக் கற்பித்துள்ளார்.

சீனப் புத்தாண்டுக்கு முந்தைய நாளன்று பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்வார். பள்ளியிலிருந்து முன்கூட்டியே வீட்டுக்குப் போக முடிவதால் ஒரே குதூகலம். சீனப் பண்பாட்டில் அதிர்ஷ்ட நிறமாகக் கருதப்படும் சிவப்பு ஆடையை அணிந்து, கைவினைப் பொருள்களைச் செய்து மகிழ்ந்தார்.

பின்னர், தந்தை கவியுடன் உணவகத்திற்குச் சென்று கடல் உணவு கலந்த சோற்றைச் சாப்பிட்டு மகிழ்ந்தான் சிறுவன் சைலேஷ்.

சீனப் புத்தாண்டு காலத்தில் தமது நடனக்குழுவுடன் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் தந்தை கவி, சிங்கப்பூரிலுள்ள பல்வேறு சமூகத்தினரின் பண்பாட்டை அறிந்து எல்லோரது கொண்டாட்டங்களிலும் ஈடுபடுவது நல்லதாகும் என்றார்.

“துருதுருவென, புன்னகை பூத்த முகத்துடன் காணப்படுவான் சைலேஷ். என் மகனுடன் பொழுதைக் கழிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சீனப் புத்தாண்டு போன்ற விடுமுறை நாள்கள், என் மகனுடன் நேரம் செலவழிப்பதற்குப் பொருத்தமாக உள்ளன,” என்று திரு கவி கூறினார்.

புரிந்துணர்வும் பொது அறிவும் பெருகும். எனவே, பண்டிகை நேரங்களை இதற்காகப் பயன்படுத்துவோம். பண்பட்ட மனிதர்களாக மாறுவோம்.

குறிப்புச் சொற்கள்