சித்திரைப் புத்தாண்டைச் சிறப்பிக்கப் பூத்த மலர்கள்

சித்திரைப் புத்தாண்டைச் சிறப்பிக்கப் பூத்த மலர்கள்

5 mins read
செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி மாணவர்களின் கைவண்ணம்
a11bec06-e76d-4acb-8b8d-65e1cdb4c79a
படம்: - செயற்கை நுண்ணறிவு

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ் மக்கள் சித்திரை மாதம் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் அழகான கோலம் இடுவது வழக்கமாக உள்ளது. அன்று புத்தாடை அணிந்து புத்தாண்டை வரவேற்பதும் பழக்கத்தில் உண்டு. மா, பலா, வாழை, நெய் வைத்து இறைவனை வணங்குவர்.

மேலும் சைவ உணவை உண்பார்கள். கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதையும் பார்க்கலாம். புத்தாண்டு வாழ்வின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.

ஸ்ரீதக்‌ஷன் சரவணச்செல்வன், தொடக்கதிலை 3

புத்தாண்டே வருக!

புத்தாண்டே வருக!

புத்தாண்டு பிறக்கட்டும்!

பூசல்கள் ஒழியட்டும்!

புதுமைகள் பெருகட்டும்!

பூமி செழிக்கட்டும்!

புன்னகை மலரட்டும்!

பூங்காற்று வீசட்டும்!

புதுவாழ்வு கிடைக்கட்டும்!

ஹரினி ராஜதுரை, தொடக்கநிலை 3

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு வந்ததே!

புது நாள் இனிதாய்ப் பிறந்ததே!

மாம்பழமும் இனிப்புச் சுவையும்!

மகிழ்ச்சி நிறைந்த வீடு முழுவதும்!

புது ஆசைகள் பூக்கும் நாளில்!

புன்னகை மலரும் முகங்களில்!

அன்பும் இன்பமும் மலரட்டும்!

அனைவரும் ஆனந்தமாக இருக்கட்டும்!

ஜெயகுமார் சாய்ஷா, தொடக்கநிலை 3

தமிழர்களின் நம்பிக்கை

2026ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. இது தமிழ் மாதமான சித்திரை முதல் தேதியைக் குறிக்கிறது. அன்றைய தினமே புதிய தமிழ் ஆண்டு பிறக்கிறது.

புத்தாண்டுக்கு முதல் நாள் இரவே ஒரு தட்டில் முக்கனிகள்(மா, பலா, வாழை), வெற்றிலை, பாக்கு, தங்க/வெள்ளி நகைகள், நாணயங்கள் மற்றும் ஒரு கண்ணாடி ஆகியவற்றை வைப்பார்கள். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்தவுடன் முதன்முதலில் இந்த மங்கலப் பொருள்களைப் பார்ப்பது அந்த ஆண்டு முழுவதும் செழிப்பைத் தரும் என்று சிலரின் நம்பிக்கையாகும்.

ஃபலிஷா, தொடக்கநிலை 4

மகிழ்ச்சியான நிலைவலைகள்

ஒருமுறை, தமிழ்ப் புத்தாண்டுக்கு முந்தைய நாள் என் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தேன். தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பட்டாசுகளை வெடித்தும் மெழுகுவத்திகளை ஏற்றியும் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்.

தமிழ்ப் புத்தாண்டு அன்று எங்கள் வீட்டிற்கு ஏராளமானோர் வந்தனர். என் தோழி, ஸ்ருதி என் வீட்டிற்கு வந்தாள். நானும் அவளும் பட்டாசு விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் அருசுவை உணவைச் சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

உணவு உண்ட பிறகு நானும் என் பெற்றோரும் பெரியவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கச் சென்றோம். நாங்கள் கடவுளை வேண்டிக்கொண்டோம். பிறகு, அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம்.

ஷாஸ்மித்தா, தொடக்கநிலை 4

சித்திரைப் புத்தாண்டு

சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்,

புதிய ஆண்டு ஆனந்தமாக வாழ்வோம்,

வீட்டில் அலங்காரம் செய்வோம்,

பக்தியுடன் கோயிலுக்குச் செல்வோம்,

வாழ்த்துகள் கூறி மகிழ்வோம்,

இனிய உணவைச் சாப்பிடுவோம்,

வாழ்க்கையில் நம்பிக்கை பெறுவோம்,

சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்.

அக்‌ஷரா, தொடக்கநிலை 4

உலக தமிழர்களின் விழா

தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளாகும். இது உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் மிகுந்த உற்சாகதுத்துடன் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.

தமிழர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி புத்தாடை அணிந்து கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்வார்கள். பெரியவர்களிடம் ஆசி பெறுவதும் வழக்கமாக உள்ளது. தமிழர்கள் புத்தாண்டன்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள். வெற்றிலை பாக்கு, நகைகள் நெய் முதலான மங்கல பொருள்களைத் தட்டில் வைத்து இறை வழிபாடு செய்வர்.

அமிர்தலிங்கம் சிலம்பரசி ஆதிரை, தொடக்கநிலை 5

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!!!

வருடப் பொன் விடியல்,

புது விடியல் பொன் ஒளியில்,

மலர் மணம் வீசும் காற்றில்,

மனத்தில் மலரும் நம்பிக்கையில்,

நாள்கள் மலரட்டும் மகிழ்ச்சியில்,

வாழ்வில் பொங்கட்டும் இனிய கனவு,

ஒவ்வொரு தருணமும் தரட்டும் புதிய வாய்ப்பு.

கெவின், தொடக்கநிலை 5

சித்திரையே வருக!

சித்திரையே வருக!

செழுமையான வாழ்வைத் தருக!

சாதிமத மோதில்லா சமத்துவத்தைத் தருக!

நோய்நொடி இல்லாத வாழ்க்கையைத் தருக!

நித்தம் நித்தம் யுத்தமில்லா நித்திரையைத் தருக!

சித்திரை தமிழ்த் தாயே வருக!

மக்களுக்குச் செழுமையான வாழ்வைத் தருக!

ஆண்ட்ரு, தொடக்கநிலை 6

தமிழர்களின் முதல் நாள்

தமிழ்ப் புத்தாண்டு தமிழர்களுக்கு ஒரு சிறப்பான, முக்கியமான நாள் ஆகும். அன்று சூரியன் கிழக்குப் பகுதியின் நேர்க்கோட்டில் உதிக்கும். ஆகவே, சூரியனுக்குப் பொங்கல் வைத்து, சூரியனை வழிபடுவார்கள். அன்று அறுசுவை உணவோடு விருந்து உண்பார்கள். சித்திரை மாதமே தமிழர்களின் முதல்நாள். மேலும், சித்திரை திருவிழா மதுரையின் மாபெரும் திருவிழா ஆகும்.

ச. ஸ்ரீகிருஷ்ணன், தொடக்கநிலை 6

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 14 ) கொண்டாடப்படுகிறது. வசந்த காலம் தொடங்கும் காலம் இந்த சித்திரை மாதம் ஆகும். இயற்கையோடு இணைந்து வாழும் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் புகழ்பெற்ற விழாவாகும். புத்தாண்டு அன்று அதிகாலையிலே வாசலில் வண்ண கோலமிட்டு, புத்தாடை அணிந்து நெல்லுடன் மா, பலா, வாழை போன்ற முக்கனிகளைப் படைத்து இயற்கையை வணங்கி நன்றி செலுத்துவர். இந்நாளில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு கொண்ட அறுசுவை உணவை உறவினர்களோடு உண்டு பெரியோர்களிடம் ஆசி பெறுவது வழக்கமாகும். சித்திரை முழுவதும் கலை

நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனம், நாட்டுப்புற இசை மற்றும் நாடகங்கள் என எல்லா இடங்களிலும் கோலாகலமாகத் திருவிழா களைகட்டும்.’சித்திரையில் செல்வமழை’ என்னும் பழமொழி சித்திரை மாதம் பெய்யும் மழையின் சிறப்பைக் குறிப்பதாகும். சித்திரை மாதத்தில் புதிய நம்பிக்கையுடன் விவசாயிகள் பயிரிடத் தொடங்குவர்.

தமிழர்களின் கலாசாரம், பண்பாடு மற்றும் அறிவியல் அறிவின் அடையாளமான தமிழ்ப் புத்தாண்டு தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 2026 தமிழ்ப் புத்தாண்டு புது ஒளியையும் நம்பிக்கையையும் அன்பையும் வழங்கி சிறப்பிக்கட்டும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மதனா, தொடக்கநிலை 6

தமிழ்ப் புத்தாண்டு

சித்திரை முதல்நாளாம், தேன்தமிழ் புத்தாண்டே வருக!

வையகம் செழித்திட, வான்போற்றும் இனம்நாம்,

அன்பு பெருக அமைதி நிலவ ஒருங்கே,

வேண்டி மகிழும் புத்தாண்டே வருக!

திங்கள் கதிர்தொட்டு தொடங்கும்

திருநாளில் திக்கெட்டும் தித்திப்பாய்

மகிழ்ச்சி பொங்க மனதார வாழ்த்தி

வரவேற்போம் இனியதமிழ் புத்தாண்டே வருக! வருக!

தன்வந்த், தொடக்கநிலை 6

குறிப்புச் சொற்கள்