குறைந்த கட்டணத்தில் விளையாடி மகிழ செங்காங்கிற்கு செல்லலாமா?

2 mins read
146ba58e-f41b-4d1d-a936-99cf3dcf9ec1
ஐந்து வகையான் நீர் சறுக்கல்களைக் கொண்ட செங்காங் நீச்சல்குளம். - படம்: செங்காங் விளையாட்டு நிலையம்

கோடை வெய்யிலைத் தணிக்க, குறைந்த செலவில் குளுகுளு என்று உல்லாசமாக பொழுதைக் கழிக்கவேண்டுமா? உங்களுக்காக 57, அங்கர்வேல், செங்காங் நீச்சல்குளம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நீச்சல்குளம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காலை 6.30 மணி முதல் இரவு 9.30 வரையும் மற்ற நாள்களில் காலை 8 முதல் 9.30 வரையும் திறந்திருக்கும். திங்கட்கிழமை மூடப்பட்டு இருக்கும்.

கட்டணம் சிறியவர்களுக்கு 80 காசு, பெரியவர்களுக்கு ஒரு வெள்ளி ஐம்பது காசு. இரண்டு வெள்ளிக்குள் கட்டணம் செலுத்தி குடும்ப உறுப்பினர்கள் விளையாடி, மகிழ உங்களுக்காகவே திறக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு ஐந்து நீர் சறுக்கல்கள் உள்ளன. அதில் இரண்டு மூடப்பட்ட குழாய் வடிவத்தில் பல வளைவுகளுடன் காணப்படுகின்றன. மற்ற மூன்று நீர் சறுக்கல்கள் திறந்தவெளியில் உள்ளன.

60 மீட்டர் நீளமுள்ள காட்டன் கான்டி நீர் சறுக்கலில் கண்களை மூடிக்கொண்டு படுத்தால் நீர் மெதுவாக உங்களைத் தாலாட்டி நீச்சல்குளத்திற்கு அழைத்துச் செல்லும்.

80 மீட்டர் நீளமுள்ள சுகர் ரஷ் எனப்படும் நீர் சறுக்கல், விறுவிறுப்பாக, நண்பர்களுடன் போட்டிப்போட்டு நீர் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட ரெயின்போ டேஷ் எனப்படும் நீர் சறுக்கல்களும் அங்கு உண்டு.

மொத்தம் ஐந்து சறுக்கல்களில் விளையாடி மகிழ்ந்ததும் களைத்துப் போனால் அருகிலேயே பாஸ்டாமேனியா, மெக்டோனல்ட்ஸ் உணவகங்கள் இருக்கின்றன.

பள்ளி தொடங்கிவிட்டதால் வார இறுதி நாள்களில் அங்கு சென்று விளையாடி மகிழுங்கள் சிறுவர்களே!

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்