விடுமுறைக் காலம் தொடங்கிவிட்டது. இந்த விடுமுறை நாள்களை மேலும் இனிமையாக்க தேசிய நூலக வாரியம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
கேளிக்கை நிறைந்த பற்பல நடவடிக்கைகளுடன் வாசிப்பையும் கற்றலையும் மேம்படுத்த சிறாரும் அவர்களின் பெற்றோரும் இணைந்து பங்கேற்று மகிழ்ந்திட நூலக வாரியம் அளிக்கும் நிகழ்ச்சிகள் என்ன? வாருங்கள் அறிந்துகொள்வோம்!
தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் உள்ளிட்ட வெவ்வேறு மொழிகளில் கதை கேட்க வாய்ப்பு; ஆர்வத்தைத் தூண்டும் ‘3D’ முப்பரிமாண அமர்வுகள்; குறியீடு, நிலைத்தன்மை உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்ச்சிகள் மாணவர்களாகிய நீங்கள் பங்கேற்று மகிழ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ் வாசிப்பு மன்றம் நிகழ்ச்சிகள் குறித்த விவரம் உங்களுக்காக இங்கு தரப்பட்டுள்ளது. பெற்றோருடன் சென்று புதிய அனுபவத்தைப் பெற்றிடுங்கள்.
கதையோடு விளையாடு:
நாள்: 13 ஜூன், நேரம்: இரவு 7 மணி முதல் 7:30 மணி வரை (ஒவ்வொரு மாதமும் 2வது வெள்ளிக்கிழமை) இடம்: செங்காங் பொது நூலகம், நிகழ்ச்சி அரங்கு (Programme Zone 3)
புத்தக நிஞ்சாக்கள்:
ஐந்து முதல் ஆறு வயதுள்ள பாலர் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கான இந்நடவடிக்கையின் நோக்கம் அந்த இளம் பிள்ளைகள் மத்தியில் தமிழ் மொழியை வாசிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவது. நாள்: 14 ஜூன் நேரம்: காலை 11 மணி முதல் 11:45 மணி வரை. (இணையம் வழி - zoom)
குறளோடு விளையாடு:
நாள்: 14 ஜூன், (ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை) நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணி வரை இடம்: சுவா சூ காங் பொது நூலகம், நிகழ்ச்சி அரங்கு (Programme Zone 1)
சொல்லாடும் முன்றில்:
நாள்: 15 ஜூன் ஞாயிறு, நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை இடம்: ஜூரோங் வெஸ்ட் பொது நூலகம்.

