தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோலம் போட கற்றுக்கொண்டேன்

1 mins read
734723b0-a411-4279-ab57-2ba6b966094c
கோலம் போடக் கற்றுக்கொண்டேன். - படம்: இணையம்

காலையில் பள்ளி மண்டபத்தில் ஆசிரியர்கள் பொங்கலைப் பற்றிய அவர்களது அனுபவத்தை மாணவர்களாகிய எங்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

பள்ளி இடைவேளை நேரத்தில் முதலில் கோலம் வரையும் நடவடிக்கை இருந்தது. அரிசி மாவை எடுத்து ஆசிரியருடன் இணைந்து நாங்களும் கோலம் போட்டோம்.

அதற்கு பல வண்ணங்களைத் தீட்டி மகிழ்ந்தோம். என்னுடைய சகமாணவர்கள் கோலாட்டமும், கரகாட்டமும் ஆடினர்.

நாங்கள் அதை கண்டு ரசித்தோம். அது மிகவும் சிறப்பாக இருந்தது. எனக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது.

அடுத்து மாடு உருவத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொம்மையிலிருந்து நாங்கள் பால் கறக்கும் அனுபவத்தைப் பெற்றோம்.

பொங்கல் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக உறி அடித்தல் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. நான் பானை இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குப் பதிலாக பல வண்ண மலர்கள் நிறைந்த பை ஒன்று தொங்கவிடப்பட்டு இருந்தது. இது எனக்குப் புதுமையாக இருந்தது.

பள்ளியின் தலைவர்கள், மற்ற ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டூழியர்கள் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்தனர்.

அதில் மாணவர்களாகிய நாங்களும் பங்கு கொண்டோம். அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இவ்வளவு நடவடிக்கைகளை எங்களுக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சீனிவாசன் ஷஞ்ஜனா தொடக்கநிலை 5 கார்ப்பரேஷன் தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்