தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மோலி’யைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
ef918e66-2a14-4196-afd2-de3910871a94
மோலி நூலக வாகனத்திற்குள் செல்ல ஹோங் வென் பள்ளி மாணவர்கள் வரிசையில் நிற்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய நூலக வாரியத்தின் ‘மோலி’ எனப்படும் நடமாடும் நூலகப் பேருந்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

2008ஆம் ஆண்டு ‘மோலி’ முதன்முதலில் சாலைகளில் நடமாடத் தொடங்கியதிலிருந்து இதுவரை 840,000 பேர் பயன்படுத்தியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில், நடமாட்ட நூலகச் சேவை கிட்டத்தட்ட 1.56 மில்லியன் புத்தக இரவல்களைப் பெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும், 116,000க்கும் அதிகமானோர் நூல்களை இரவல் பெற்றனர்.

மோலி தொடங்கப்பட்டதிலிருந்து, அது மூன்று வாகனங்களாக வளர்ந்துள்ளது. ஒரு பெரிய வாகனம் மற்றும் இரண்டு சிறிய வாகனங்கள் 2014ல் தொடங்கப்பட்டன என்று தேசிய நூலக வாரியப் பொது நூலகங்களின் இயக்குநர் திருமதி டான் சூய் பெங் கூறினார்.

பெரிய மோலி வாகனம் நாள்தோறும் இரண்டு இடங்களுக்குச் செல்கிறது. அதில் 15 பெரியவர்கள் அல்லது 25 குழந்தைகள் அமர்ந்து படிக்கலாம். ஐந்து சக்கர நாற்காலி பயனாளர்களுக்கும் அங்கு இடமுண்டு.

குறிப்புச் சொற்கள்