இந்தியாவில் உலகின் மிக நீளமான 2வது பெருஞ்சுவர்

1 mins read
710d0939-52cb-4ded-9267-a37ca2cd4864
உலகின் 2வது மிக நீளமான பெருஞ்சுவர். - படம்: ஊடகம்

சீனப் பெருஞ்சுவர் உலகிலேயே நீளமானது என்பது தெரிந்த விஷயம்.

பலர் அங்கு சென்று பார்வையிட்டிருப்பீர்கள். ஆனால், இரண்டாவது நீளமான பெருஞ்சுவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைப்பகுதியில் உள்ள இந்தச் சுவரின் அகலம் 6 மீட்டர். ஆரவல்லி மலையில் 1,600 மீட்டர் உயரத்தில் 36 கிலோமீட்டர் நீளத்திற்கு உள்ளது.

15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்ட கும்பல்கர்க் என்ற கோட்டையில்தான் இந்தப் பெருஞ்சுவர் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1,100 அடி உயரத்தில் உள்ள இந்தப் பெருஞ்சுவரிலிருந்து தார் பாலைவனத்தை நன்கு பார்வையிடலாம்.

டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர் ரயில் நிலையங்கள் வந்து அங்கிருந்து பால்னா நகர ரயில் நிலையத்தை அடைந்தால் இந்தப் பெருஞ்சுவர் பகுதியை எளிதில் அடைந்துவிடலாம்.

மலைக்கோட்டைகள் நிறைந்த ராஜஸ்தான் மாநிலத்திற்கு மற்றுமொரு மகுடமாக அமைந்துள்ளது இந்தப் பெருஞ்சுவர்.

காலத்தால் அழியாத இந்தப் பெருஞ்சுவர் எதற்காகக் கட்டப்பட்டது என்பது இதுவரை அறியப்படவில்லை.

விடுமுறையில் குடும்பத்தினரோடு சென்று பார்த்து வரலாம்.

குறிப்புச் சொற்கள்