புதிய துவக்கங்களைக் குறிக்கும் இந்தியர்களின் புத்தாண்டு நெருங்குகிறது.
தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை (ஏப்ரல் 14, திங்கட்கிழமை) தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
அதே நாளை பல்வேறு இந்தியர்களும் கொண்டாடுகின்றனர் (சீக்கியர்களுக்கு ‘வைசாக்கி’, மலையாளிகளுக்கு ‘விஷூ’, பெங்காலிகளுக்கு ‘பொஹெலா பைஷாக்’).
தெலுங்கர்கள் உகாதியை சற்று முன்னதாகவே மார்ச் 30ஆம் தேதியன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தியப் புத்தாண்டை முன்னிட்டு, வரும் வார இறுதியில் (ஏப்ரல் 12, 13ஆம் தேதிகள்) காலை 10 முதல் மாலை 5 மணி வரை இந்திய மரபுடைமை நிலையத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
பாரம்பரிய தஞ்சாவூர் பொம்மை வண்ணந்தீட்டுதல் பயிலரங்கு
நாள், நேரம்: ஏப்ரல் 12, சனிக்கிழமை பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரை ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 முதல் 12.30 மணி வரை. கட்டணம்: $15
தஞ்சாவூர் பொம்மையை எப்படி வண்ணந்தீட்டி அழகுபடுத்துவது என பாரம்பரியக் கலைஞர் பாஸ்கரன் இப்பயிலரங்கில் கற்பிப்பார்.
பாரம்பரிய வாழையிலை உணவு உண்ணும் பயிலரங்கு
நாள்: ஏப்ரல் 12. காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை. கட்டணம்: $20
தொடர்புடைய செய்திகள்
14 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது ஏற்புடையதாக இருக்கும். வாழையிலையில் உண்பதன் பண்பாட்டுச் சிறப்புகளை இப்பயிலரங்குவழி அறியலாம்.
சிங்கப்பூர் இந்திய இசைக்குழு (Singapore Indian Orchestra and Choir)
நாள்: ஏப்ரல் 12, 13, நேரம்: காலை 11 முதல் 11.30 மணி வரை. கட்டணம்: இலவசம்
இந்தியப் புத்தாண்டை இனிய பாரம்பரிய, சமகால இசையுடன் வரவழையுங்கள்!
கைவினை நடவடிக்கைகள்
நாள்: ஏப்ரல் 12, 13. காலை 10 முதல் மாலை 5 மணி வரை. கட்டணம்: இலவசம்
பண்பாட்டுச் சிறப்புமிக்கத் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளை நீங்களே அழகான வண்ணங்களில் வடிவமைக்கலாம். கேரளாவின் ‘தெய்யம்’ நடனக்கலைஞர்கள் பயன்படுத்தும் முகமூடியில் வண்ணந்தீட்டலாம்.
‘கொலுப் பொம்மை’களின் உருவாக்கத்தை நேரில் காணும் வாய்ப்பு
நாள், நேரம்: ஏப்ரல் 12. பிற்பகல் 3 முதல் 5 மணி வரை.
ஏப்ரல் 13 பிற்பகல் 2 முதல் 5 மணி வரை. கட்டணம்: இலவசம்
நவராத்திரியின்போது பலருடைய வீடுகளிலும் ‘கொலு’ பொம்மைகள் அழகாகக் காட்சிப்படுத்தப்படுவதைக் காணலாம். அவற்றை எவ்வாறு உருவாக்குவது என என்றாவது நீங்கள் சிந்தித்துள்ளீர்களா?
இந்தியாவிலிருந்து வரும் சிற்பி இந்திய மரபுடைமை நிலையத்தில் ‘கொலுப் பொம்மை’யின் உருவாக்கத்தை மக்களிடம் நேரில் காண்பிப்பார்.
இந்தியத் தூதரகத்துடன் இணைந்த ‘கலா சங்கம்’ முயற்சியின் ஓர் அங்கமாக இது நடைபெறுகிறது.
தமிழில் இந்திய மரபுடைமை நிலைய இலவசச் சுற்றுலா
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக இந்திய மரபுடைமை நிலையத்தில் சுற்றுலாக்கள் தமிழில் இலவசமாக வழங்கப்படும். இச்சுற்றுலாக்கள் ஏப்ரல் 12, 13ஆம் தேதிகளில் காலை 11 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு சுற்றுலாவிலும் அதிகபட்சம் 20 பேர் கலந்துகொள்ளலாம்.
இச்சுற்றுலா மூலம் தெற்காசிய, தென்கிழக்காசிய தொடர்புகள், அயலக இந்தியர்கள், சிங்கப்பூரின் முன்னோடிகள், சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் ஆகியவற்றின் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்துகொள்ளலாம்.
சில நிகழ்ச்சிகளுக்கும் சுற்றுலாவுக்கும் https://ihc-programmes.peatix.com/ இணையத்தளத்தில் பதிவுசெய்யவேண்டும்.
மேல்விவரங்களுக்கு https://ihc-iny-2025.peatix.com/ இணையத்தளத்தை நாடலாம்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கு இந்திய மரபுடைமை நிலையத்தினுள் அனுமதி இலவசம். சிங்கப்பூரர், நிரந்தரவாசி அல்லாத பெரியவர்களுக்குக் கட்டணம் $8. சிங்கப்பூரர், நிரந்தரவாசி அல்லாத மாணவர்களுக்கும் முதியோருக்கும் கட்டணம் $5.