தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேக்கா பிளேசில் பானைகளுக்கு வண்ணம் தீட்டிய சிறுவர்கள்

2 mins read
7c465041-9947-431f-80f7-5d6575277869
இந்திய மரபுடைமை நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் சாவடிகளில் சிறுவர்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். - படம்: சிங்காரம்

பொங்கலை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையமும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர், மரபுடைமை சங்கமும் இணைந்து பல பொங்கல் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துவருகின்றன.

லிஷாவின் ஏற்பாட்டில், ஜனவரி 11ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை, தேக்கா பிளேசின் இரண்டாம் தளத்தில் பொங்கல் பானை ஓவியம் தீட்டும் பயிலரங்கு நடைபெற்றது. அதில் பல சிறுவர்கள் தம் பெற்றோருடன் கலந்துகொண்டனர்.

பாலாஜி தர்ஷன், 11

“ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பானைகளுக்கு எவ்வாறு ஓவியந்தீட்டுவது என எனக்குத் தெரியும். பானையின் அடியில் நெருப்பையும், மேலே மாவிலைகளையும் வரைவோம்,” என்றார் தன் குடும்பத்தினருடன் வந்திருந்த பாலாஜி தர்ஷன், 11.

பொங்கோலில் பொங்கல்

வர்ஷா கோதை, 10.

“நான் இதற்கு முன்பு பொங்கோல் சமூக மன்றத்தில் பொங்கல் பானையில் ஓவியம் தீட்டியுள்ளேன். ஆனால் இம்ம்முறை, பானை அதைவிடப் பெரிதாக இருந்தது. பொங்கலுக்கு நான் குலாப் ஜாமூன் செய்ய விரும்புகிறேன்,” என்றார் பொங்கோல் தொடக்கநிலைப் பள்ளியைச் சார்ந்த வர்ஷா கோதை, 10.

தன் தாயாருடன் முகமது யாசின் சதியா, 5.

பொங்கலைப் பெரும்பாலும் இந்துக்களே கொண்டாடினாலும், சிங்கப்பூரின் பல்லின, சமூகத்துக்கு இலக்கணமாக மற்ற இனங்கள், சமயங்களைச் சார்ந்தோரும் பொங்கல் நடவடிக்கைகளில் பங்கேற்றனர். அவர்களில்ஒ ருவர்தான் முகமது யாசின் சதியா, 5 (பிசிஎஃப் ஸ்பார்குல்டோட்ஸ் கம்போங் கிளாம்)

“அவளுக்கு வண்ணம் தீட்டப் பிடிக்கும் என்பதால் அவளை அழைத்துவந்தேன்,” என்றார் அவருடைய தாயார்.

தம் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட தோழர்கள் ‌‌ஸ்ரீ கவின், 7 (நடுவில்), கியான்‌ஷ், 5.

பஞ்சாபிகளின் பொங்கல் - ‘லோரி’

பஞ்சாபைச் சார்ந்த கியான்ஷ், 5, பொங்கலுக்கு முந்தினம் ‘லோரி’ (Lohri) எனும் வட இந்தியப் பண்டிகையைக் கொண்டாடுவார். சிறுவர்களின் முதல் ‘லோரி’, பெரும் வி‌சே‌‌ஷமாகக் கொண்டாடப்படும். அன்றைய இரவில், அவர்கள் குடும்பமாக நெருப்பைச் சுற்றி ஏழு முறை வலம் வருவார்கள். இயற்கைக்கு நன்றிகூறவும், புத்தாண்டை வரவேற்கவும் அவர்கள் பாப்கார்ன், வெல்லம், எள், வேர்கடலை போன்றவற்றை நெருப்பில் போடுவார்கள். அவற்றைப் பிரசாதமாகவும் உண்பார்கள். ஆடல், பாடல், கதைசொல்லுதல் என கொண்டாட்டம் களைகட்டும்.

அவருடன் வந்த ஸ்ரீ கவின், 7, சென்ற ஆண்டும் பொங்கல் பானையில் ஓவியம் தீட்டினார். “நாங்கள் சென்ற ஆண்டு ஒன்றாக இணைந்து கூட்டுப் பொங்கலில் பங்கேற்றோம்,” என அவர் கூறினார்.

“நாங்கள் இந்திய மரபுடைமை நிலையத்தில் பல பொங்கல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவுள்ளோம். பொங்கல் தினத்தன்று பாலைப் பொங்க வைப்போம். சர்க்கரைப் பொங்கல் உண்போம்,” என்றார் ‌ஷ்ரவன் பிரசாந்த், 9.

‌ஷ்ரவன் பிரசாந்த், 9.

குறிப்புச் சொற்கள்