உலகின் முன்னணி ‘சீஸ்’ நிறுவனங்களில் ஒன்றான ‘த லாஃபிங் கவ்’ (The Laughing Cow) செந்தோசா தீவில் சிறுவர்களுக்கான தனது ‘சீஸ்’ தொழிற்சாலை ஒன்றை பிப்ரவரி 27ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.
‘கிட்ஸானியா’ சிங்கப்பூர் (Kidzania Singapore) சிறுவர் பொழுதுபோக்கு மையத்துடன் இணைந்து இந்த ‘சீஸ்’ தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளது ‘தி லாஃபிங் கவ்’ நிறுவனம்.
‘சீஸ்’ தயாரிப்பாளர்கள்போல சிறுவர்கள் பாவனை செய்து ‘சீஸ்’ கட்டிகளின் தரம், தயாரிப்பு, ஆரோக்கிய நன்மைகள், சுகாதார செயல்முறைகள் போன்ற பல்வேறு படிநிலைகளை அறிந்துகொள்ளலாம்.
சுறுசுறுப்பான சூழலில் ஆர்வத்தையும் சிந்தனையையும் வளர்க்க இந்த ‘சீஸ்’ தொழிற்சாலை உதவும் என்று தெரிவித்தனர் ‘த லாஃபிங் கவ்’ நிறுவனம்.
அதுமட்டுமின்றி விளையாட்டின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகடைப்பிடித்தல், ஆழ்ந்த சிந்தனைத் திறன்களை மேம்பட இந்தத் தொழிற்சாலை சிறுவர்களுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சாலை அனுபவத்தை முடித்த சிறுவர்களுக்கு ‘த லாஃபிங் கவ் சீஸ் தயாரிப்பாளர்’ என்று சான்றிதழ் வழங்கப்படும்.
சிங்கப்பூர் குடும்பங்களுக்கு மகிழ்ச்சிகரமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் அனுபவத்தை வழங்க ‘தி லாஃபிங் கவ்’ நிறுவனம் முற்பட்டுள்ளது.
‘த லாஃபிங் கவ்’ நிறுவனம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://thelaughingcow-sea.com/ என்ற இணையத்தளத்தை பொதுமக்கள் நாடலாம்.

