சவூதி அரேபியாவில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான, நேரான சாலை என்கிற சிறப்பைப் பெற்றிருக்கிறது.
இந்தச் சாலை 256 கி.மீ. தூரம் வரை எந்த வளைவுகளும் இல்லாமல் நேரான பாதையாக இருப்பதால், மிகவும் பிரபலமாகிவிட்டது.
இந்தச் சாலையிலிருந்து பல சாலைகள் பிரிந்து, பல நகரங்களை இணைக்கின்றன. தென்மேற்கில் உள்ள Al Darb நகரத்தையும் கிழக்கில் Al Batha நகரத்தையும் இணைக்கும் சாலை மிக நீளமாகவும் நேராகவும் இருக்கிறது.
சவுதி அரேபியாவின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்துக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அதிகம் பயணிக்கப்படுகிறது.
இந்தச் சாலை உலகின் மிக நீளமான நேரான சாலைக்கான கின்னஸ் சாதனையையும் பெற்றுவிட்டது.
ஒருபக்கம் கின்னஸ் சாதனை கிடைத்தாலும் மற்றொரு பக்கம், இது ‘மிகவும் சலிப்பான சாலை’ என்றும் அழைக்கப்படுகிறது.
கண்களுக்கு எட்டிய தூரம் வரை ஒரே மாதிரியான காட்சிகளாகவே தென்படும். அதில் வளைவுகள் இல்லாததால், தட்டையான நிலப்பரப்பில் அமைதியாக வாகனங்களை ஓட்டிச் செல்வது சலிப்பைத் தருவதாக ஓட்டுநர்கள் சொல்கிறார்கள். இந்த மிக நீளமான நேரான சாலையைக் கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும்.
மிக அழகான விமான நிலையம்
ஸ்காட்டிஷ் தீவுகள் மொத்தம் 850 உள்ளன. இவற்றில் அவுட்டர் ஹெப்ரீட்ஸ் கூட்டத்தில் உள்ள ஒரு தீவு பாரா அல்லது பர்ரா. இங்கு வெண்கலயுகம், இரும்பு யுகம், கற்காலம் இவற்றில் வாழ்ந்த மக்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஊரை சற்றி ஏராளமான ஒற்றை கற்கள் நிற்கின்றன. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த ஊரின் ஸ்பெஷல், விமான ஓடு பாதையாகும்.
பாராவின் விமான நிலையம் மூன்று கி. மீ. நீளமுள்ள காகிள் ஷெல் கடற்கரைதான். அலைகள்தான் இதன் ஓடு பாதை. விமானங்கள் குறைந்த அலையில் மட்டுமே தரை இறங்கவும் புறப்படவும் முடியும். அதற்கேற்ப நேர அட்டவணையும் மாறும். இதற்காக திட்டமிட்ட விமானத்தை மட்டுமே இங்கு பயன் படுத்துகின்றனர்.
இதனால் உலகின் மிக அழகிய தரையிறங்கு இடமாக இந்தப் பாதை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரே கடல் சார்ந்த வெப்ப நிலை கொண்டது. இதனால் ஆண்டு முழுவதும் லேசான வெப்பம்தான் இருக்கும்.
பழங்களின் ராணி
முக்கனிகளில் ஒன்று மாம்பழம். இது பழங்களின் ராஜா எனப்படுகிறது. பழங்களின் ராணி மங்குஸ்தான். சற்று மங்கலான நிறத்தில் இருக்கும். இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை உடையது.
தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக உடையது. இந்தியாவின் தென்மாநில மலைப்பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம். கண் எரிச்சலை தீர்க்க உதவும்.
ஒவ்வாமை சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. உடலை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மங்கலான நிறத்தில் இருந்தாலும் மங்குஸ்தானில் அரிய வகை சத்துக்கள் நிறைந்து உள்ளன. அதனால் தான் இது, ‘பழங்களின் ராணி’ என அழைக்கப்படுகிறது.
எறும்பும் தூக்கமும்
சுறுசுறுப்புக்கு உதாரணம் சொல்லும்போது, ‘எறும்புபோல ஓய்வின்றி இயங்குவான்’ என்பார்கள்.
இது, எறும்புகள் தூங்குவதே இல்லை என்பதுபோல அர்த்தம் தருகிறது. ஆனால், ‘எறும்புகளும் தூங்குகின்றன’ என்கிறது ஃபுளோரிடா பல்கலைக்கழக ஆய்வு.
சோதனைக்கூடத்தில் செயற்கையான எறும்புப் புற்றைக் கண்ணாடிக் கூரையால் உருவாக்கி, அதில் எறும்புகளை வளர்த்து ஆராய்ந்து பார்த்தார்கள்.
அதில், வேலைக்கார எறும்புகள் பகல், இரவு என்று பார்க்காமல், ஒருநாளில் சுமார் 250 தடவை குட்டித் தூக்கம் போட்டனவாம். அதாவது, ஒவ்வொரு குட்டித் தூக்கமும் ஒரு நிமிடம் நீடித்துள்ளது.
ராணி எறும்பு ஒருநாளைக்குச் சராசரியாக 6 நிமிடங்கள் என 90 நிமிடங்கள் தூங்குகின்றது என்று சோதனையில் தெரிய வந்திருக்கிறது.