கண்ணனும் மாறனும் தொடக்கநிலை நான்காம் வகுப்பில் படிக்கிறார்கள். அன்று ஓவிய வகுப்பு இருந்ததால் அனைவரும் அவரவர் ஓவியம் வரைவதற்கான பொருள்களை எடுத்துக்கொண்டு தயாராக ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தனர்.
ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து வணக்கம் தெரிவித்தனர். ஆசிரியரும் மாணவர்களுக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, ஒரு படத்தைக் காண்பித்து “இந்தப் படத்தைப்போல அனைவரும் வரைந்து பாருங்கள். நன்றாக வரைபவர்களுக்கு நான் ஒரு பரிசு வைத்திருக்கிறேன்,” என்றார்.
உடனே அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தார்கள். மாணவர்கள் தங்கள் மனதிற்குள் எப்படியாவது அந்தப் பரிசைப் பெற்றுவிடவேண்டும் என்ற குறிக்கோளுடன் படத்தை வரையத் தயாரானார்கள்.
கண்ணன் படத்தை வரையத் தயாரானான். அப்போது அருகில் அமர்ந்து இருந்த மாறன் கண்ணனிடம் முதல்நாள் தான் படித்த கதையைப் பற்றி பேசத் தொடங்கினான். அதனால் மாறனால் படத்தை வரைவதில் கவனம் செலுத்த முடியவில்லை.
அதனால் கண்ணனுக்கு மூக்குமேல் கோபம் வந்தது. கோபத்துடன், “மாறா!” என்று ஆத்திரத்துடன் கத்தினான்.
அந்த சத்தம் ஓவிய ஆசிரியரின் காதில் விழுந்தது. அவர் உடனே அவர்கள் அருகில் சென்று, “என்ன கண்ணா? ஏன் இப்படி சத்தம் போட்டாய்?” என்று வினவினார்.
அதற்கு கண்ணன், “ஆசிரியர், நான் படத்தை நன்றாக வரைந்து உங்களிடம் இருக்கும் பரிசைப் பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் கண்ணும் கருத்துமாக என் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் இந்த மாறன் என்னை ஓவியம் வரைய விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறான்,” என்றான்.
அதைக் கேட்ட ஆசிரியர், “ஏன் மாறா? நீ வரையவில்லையா? ஏன் கண்ணனைத் தொந்தரவு செய்கிறாய்?” என்று வினவினார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு மாறன், “நான் படித்த கதையைப்பற்றி கண்ணனிடம் விளக்கினேன். அவன் நன்றாக படம் வரையக்கூடாது என்ற எண்ணம் எனக்கு இல்லை ஆசிரியர்,” என்றான்.
உடனே ஆசிரியர், “கண்ணா! மற்றவர்கள் பாடம் செய்யும்போது அவர்களிடம் பேசுவதைத் தவிர்த்து உன் வேலையில் கவனமாக இருக்கவேண்டும். மேலும் மாறா, நீயும் நண்பர்களிடம் கோபமாக பேசுவதைத் தவிர்த்து கண்ணனிடம் பொறுமையாகப் பேசி இருக்கலாம். இனி அன்பாகப்பேசப் பழகிக்கொள். அன்புதான் உலகின் ஆணிவேர். வார்த்தைகளால் மட்டுமன்றி செயல்களாலும் அன்பைக் காட்டுங்கள்,” என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
கண்ணனும் உடனே மாறனிடம், “என்னை மன்னித்துவிடு மாறா! இனி இதுபோன்று செய்ய மாட்டேன்,” என்றான்.
மாறனும், “கண்ணா! நான் கோபமாகப்பேசியதற்கு என்னை நீயும் மன்னித்துவிடு! ஆசிரியர் அறிவுரைக் கூறிய பிறகுதான் இனி இதுபோல் எங்கும் நடந்துகொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இனி நாம் எப்போதும்போல நண்பர்களாகவே இருப்போம்,” என்று கூறினான்.
மாணவர்களே! நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இதுபோன்று இருக்கும்போது உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்?” என்று கலந்துரையாடுங்கள்.

