அறுவை சிகிச்சைவழி பிறந்த குரங்குக் குட்டி ‘அயான்’

அறுவை சிகிச்சைவழி பிறந்த குரங்குக் குட்டி ‘அயான்’

2 mins read
eb6c82a7-580f-4f0c-beb6-3c35e8ca9c25
சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில்  தாயார் சோமெல்லைப் பற்றிக்கொண்டிருக்கும் ஓராங் உத்தான் குட்டியான அயான் (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் அயான் என்ற குரங்குக் குட்டி பிறந்துள்ளது.

மார்ச் 18ல் பிறந்த அயான், ‘ஓராங் உத்தான்’ எனப்படும் மனிதக் குரங்கு இனத்தைச் சேர்ந்தது.

ஏழு நிமிடங்களுக்குப் பின்னர் மூச்சுவிட்ட குட்டி அயான்.
ஏழு நிமிடங்களுக்குப் பின்னர் மூச்சுவிட்ட குட்டி அயான். - படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்
புதிதாகப் பிறந்துள்ள அயான்.
புதிதாகப் பிறந்துள்ள அயான். - படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்

தாயான சோமெல்லின் கருப்பையில் எட்டு மாதங்கள் இருந்த பிறகு அயான் பிறந்தது. மனிதக் குழந்தைகள் சராசரியாகப் பத்து மாதங்கள் தாயின் கருவறையில் வளர்ந்து பிறக்கும்.

அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குரங்குக் குட்டியாக அயான் உள்ளது.

செயற்கைக் கருத்தரிப்பு மூலம் உருவான இந்தக் குட்டி(வலது), சிசேரியன் அறுவை சிகிச்சை வழி பிறந்தது.
செயற்கைக் கருத்தரிப்பு மூலம் உருவான இந்தக் குட்டி(வலது), சிசேரியன் அறுவை சிகிச்சை வழி பிறந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

அயான் என்ற பெயருக்கு அரபு மொழியில் ‘ஆசீர்வாதம்’ என்பது பொருள்.

பிறர் நலமாக இருக்க வேண்டும் என மனதார நினைத்து வாழ்த்துவதே ஆசீர்வாதம் எனப்படும்.

பிறந்தபோது தொடக்கத்தில் அயானின் இதயத் துடிப்பு பலமாக இல்லை. எந்த ஒலியும் எழுப்பாமல் சோர்வாக நலிந்த நிலையில் காணப்பட்டது.

ஏழு நிமிடங்களுக்குப் பிறகு அயான் தனது முதல் மூச்சை இழுத்துவிட்டபோது, விலங்கு மருத்துவர்களும் தாதியரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

மலேசியாவிலும் இந்தோனீசியாவிலும் ஓராங் உத்தான் எனப்படும் மனிதக் குரங்குகள் வாழ்கின்றன.

மனிதக் குரங்குகளில் மூன்று வகை உள்ளன. போர்னியோ மனிதக் குரங்கு, சுமத்திரா மனிதக் குரங்கு, தபானுலி மனிதக் குரங்கு ஆகியவை அவை.

பிறந்தபோது தொடக்கத்தில் அயானின் இதயத் துடிப்பு பலமாக இல்லை. எந்த ஒலியும் எழுப்பாமல் அமைதியாக, நலிந்து காணப்பட்டது.
பிறந்தபோது தொடக்கத்தில் அயானின் இதயத் துடிப்பு பலமாக இல்லை. எந்த ஒலியும் எழுப்பாமல் அமைதியாக, நலிந்து காணப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

ஆனால், மனிதர்கள் காடுகளை அழிப்பதாலும் வேட்டையாடுவதாலும் அவை மடிந்து வருகின்றன.

சோமெல்லின் பாட்டியான ‘ஆ மெங்’, பல்லாண்டுகளுக்கு முன்னதாகச் சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தின் பிரபலமான மனிதக் குரங்காகத் திகழ்ந்தது.

எனவே, அயான் குட்டி, ஆ மெங்கின் கொள்ளுப் பேரன். தாத்தா அல்லது பாட்டியின் தாய், தந்தையரைத் தமிழில் கொள்ளுத் தாத்தா அல்லது கொள்ளுப் பாட்டி என அழைப்பார்கள்.

குட்டி அயானையும் அதன் 29 வயதுத் தாயார் சோமெல்லையும் நீங்கள் வந்து பார்க்கலாம். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் பொது விடுமுறை நாள்களிலும் அவற்றைக் காணலாம்.

குறிப்புச் சொற்கள்