தை மாதம் என்றால் பொங்கல், தைப்பூசம் ஆகிய இரண்டுமே பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால், இந்த இரண்டு திருநாள்களுக்கும் தை மாதத்தின் மற்ற நாள்களுக்கும் மே தொடர்பு உண்டு.
கடந்த ஆண்டு நவம்பரில் வளர்த்த மஞ்சள் செடியை, எட்டு வயது இரட்டைச் சகோதரிகள் நவ்யா தேவி சதீஷ், நேத்ரா தேவி சதீஷ் ஆகியோர் இவ்வாண்டு பொங்கல் பானையில் கட்ட பயன்படுத்தினர்.
கோலமிடுவது, பூக்களால் வீட்டை அலங்கரிப்பது எனப் பொங்கல் தினத்தன்று வீட்டை அலங்கரிப்பர். பொங்கல் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்று இந்தச் சகோதரிகள் தங்கள் தாயாரிடம் கேட்டு அறிந்து வைத்து்ளளனர்.
“கேட்டால் கிடைப்பது பொது அறிவு; கேள்வியால் வளர்வது பகுத்தறிவு,” என்பதைத் தாயார் வித்தியா ராமசாமி அடிக்கடி கூறுவார்.
“பொங்கல் பண்டிகை வழி என் பிள்ளைகள் இயற்கையைப் பற்றிக் கற்கின்றனர். கைவினைக் கலைகளைப் பழகுகின்றனர். சத்துணவு பற்றித் தெரிந்துகொள்கின்றனர். காய்கறி உணவு வகைகளைப் பற்றியும் கேட்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
பொங்கல் தவிர, தை அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யப்படும் வழிபாடுகளில் பிள்ளைகள் கலந்துகொள்வதாகத் திருவாட்டி வித்தியா கூறினார்.
குடும்ப முன்னோர்கள் விட்டுச் சென்ற நன்மைகளை நினைவில் கொள்வது நன்றியுணர்வை வளர்க்கிறது. அத்துடன், வரும் பிப்ரவரி 1ல் இடம்பெறும் தைப்பூச தினத்தன்று அன்னதானம் செய்வதும் வழக்கமாக உள்ளது.
பண்புகளை நினைவுபடுத்தும் தை மாதத்தைத் தமிழ்க் குடும்பங்கள் நேர்த்தியுடன் கொண்டாட வேண்டும் எனத் திருவாட்டி வித்தியா கருதுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
பொங்கல், தைப்பூசம் போன்ற திருநாள்களின் பொருளை உணர்ந்து கொண்டாடும்போது, நல்ல உணர்வுகள் வளரும்என்கிறார். “எதற்கும் தயங்காமல், கேள்வி கேட்டுச் சந்தேகத்தை உடனுக்குடன் அறிந்துகொள்வது ஆரோக்கியமானது,” என்றார் வித்தியா.

