தேசிய தின அணிவகுப்பின் தேசியக் கல்வி காட்சி கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) நிறைவடைந்தது.
பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் இந்த முன்னோட்டக் காட்சி பல மாணவர்களை உற்சாகப்படுத்தியது. கடைசி தேசியக் கல்வி காட்சியில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட தொடக்கநிலை ஐந்து பயிலும் மாணவர்களும், 2,500க்கும் மேற்பட்ட உயர்நிலை மூன்று பயிலும் மாணவர்களும் வந்திருந்தனர்.
பாடாங்கில் முன்னோட்டக் காட்சியை காண திரண்ட கூட்டம் அளப்பரிய அளவில் இருந்தது. முன்னோட்டக் காட்சியின் இறுதி அங்கத்தில் வானத்தில் வண்ண வாணவேடிக்கை மிளிரிந்தன. ஆரவாரம் குறையாது மாணவர்கள் நிகழ்ச்சியை குதூகலத்துடன் கண்டு களித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி தேசிய தின அணிவகுப்புக்கு முன்னர் இன்னும் இரண்டு முன்னோட்டச் காட்சிகள் இடம்பெறும். சனிக்கிழமையன்று மரினா சவுத் படகுத்துறையிலும், மரீனா அணைக்கட்டிலும் கடற்படை காட்சியமைப்பும் இடம்பெற்றது.