மண்ணுக்கு அடியில் விளையும் சத்து!

மண்ணுக்கு அடியில் விளையும் சத்து!

1 mins read
b7953390-7d0a-4260-8e15-af0d25e9235a
சுவை தவிர, வேர் காய்கறிகள் உடலுக்கு அதிக ஆற்றலைத் தரக்கூடியவை. - படம்: பிக்ஸாபே

மண்ணுக்கு அடியில் விளையும் வேர் காய்கறிகள் நமது அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுவை தவிர, வேர் காய்கறிகள் உடலுக்கு அதிக ஆற்றலைத் தரக்கூடியவை.

உருளைக்கிழங்கு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு வேர் காய்கறி உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்குகளில் அதிக மாவுச்சத்து உள்ளது. உருளைக்கிழங்கை வறுத்து, மசித்து, குழந்தைகள் விரும்பும் பல வழிகளில் வழங்கலாம்.

சின்ன வெங்காயம்

தமிழ் சமையலின் உயிர்நாடியே வெங்காயம்தான்! இது உணவிற்கு நல்ல மணத்தையும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.

இஞ்சி மற்றும் பூண்டு

இஞ்சி, பூண்டு இரண்டும் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன. மருந்துப் பொருட்களாகவும் இவை கருதப்படுகின்றன. குறிப்பாக இஞ்சி சிறுவர்களின் இருமல் பிரச்சினைகளுக்கு உதவும் ஒரு சிறந்த வேர்.

கருணைக்கிழங்கு

கருணைக்கிழங்கு குழம்பு மற்றும் வறுவல்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நாள்பட்ட மலச்சிக்கல், மூலம், மற்றும் செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்தும். அத்துடன் இவற்றுக்கென தனித்துவமான சுவை உண்டு.

சேப்பங்கிழங்கு

சேப்பங்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், சேப்பங்கிழங்கு உண்பதால் வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்கும். வேகவைத்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவது பலருக்கும் பிடித்தது!

மண்ணுக்கு அடியில் வளர்வதால், இந்தக் காய்கறிகளில் அதிக தாதுக்கள் (Minerals) நிறைந்துள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது!

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்