குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் விளையாட்டுத் தொகுப்பு

2 mins read
52274fe8-baf5-4b88-b907-2b7291d32896
குழந்தைகளின் தொடக்க கால கல்வியறிவையும் சமூக திறன்களையும் மேம்படுத்த புதிய திட்டம் ஒன்றை ‘கிட்ஸ்டார்ட்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

பிள்ளைப்பருவ மேம்பாட்டில் குடும்பங்களுக்கு உதவும் லாப நோக்கமற்ற அமைப்பான ‘கிட்ஸ்டார்ட்’, குழந்தைகளின் ‌தொடக்க கால கல்வியறிவையும் சமூகத் திறன்களையும் மேம்படுத்த புதிய திட்டம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

எஸ்பி குழுமத்தின் ஆதரவுடன் உருவாக்‌கப்பட்ட இந்த ‘பவர்அப் பிளேடைம்’ (PowerUP Playtime) திட்டத்தின் வெளியீட்டு விழாவில், ஜனவரி 4ஆம் தேதி சனிக்‌கிழமை சவுத்சைட்@செந்தோசாவில் 1,200 கிட்ஸ்டார்ட் குழந்தைகளும் அவர்களது குடும்பங்களும் கூடினர்.

பெற்றோருக்‌கும் பிள்ளைகளுக்‌கும் இடையே அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்ப்பதற்கு விளையாட்டுடன் கதைசொல்வதை ஒருங்கிணைக்க ‘பவர்அப் பிளேடைம்’ திட்டம் நோக்‌கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தில், வெவ்வேறு வயதுப் பிள்ளைகளுக்‌குத் தகுந்த பயிலரங்கு வழியாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டிவிடும் நடவடிக்‌கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதற்கான நடைமுறை நுட்பங்களை அறிந்துகொள்வர்.

‘பவர்அப் பிளேடைம்’ திட்டத்தின் முக்‌கிய அம்சமாக ‘பிளேஃபுல் பேக்’ (PlayFULL Pack) என்ற விளையாட்டு அடிப்படையிலான வீட்டுக் கற்றல் கருவிகளை உள்ளடக்‌கிய தொகுப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு அறிவாற்றல், மொழி, உடலியக்கத் திறன்கள் முதலியவற்றை வளர்க்‌கும் நோக்‌கத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் குழந்தைகளின் உணர்வுகளையும் கற்பனையையும் தூண்டும் புத்தகங்கள், பொம்மைகள், வெவ்வேறு வயதினருக்கு ஏற்ற கைவினைப் பொருள்கள் போன்றவை அடங்கியுள்ளன.

‘பவர்அப் பிளேடைம்’ திட்டம் 2025ல் கிட்ஸ்டார்ட் அமைப்பில் பதிவுசெய்துகொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பயனளிக்கும்.

வெளியீட்டு விழாவில் குடும்பங்கள் தங்களது குழந்தைகளுடன் இணைந்து கைவினைப் பட்டறைகளில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, கதை சொல்லும் மேடை நிகழ்ச்சியையும் ‘ஃபைண்டிங் நீமோ’ திரைப்படத்தையும் அவர்கள் கண்டுகளித்தனர்.

குறிப்புச் சொற்கள்