தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதையோடு விளையாடு

1 mins read
4fae9558-83a1-4d58-bae4-d4d0654938f1
செங்கா நூலகத்தில் நடைபெற்ற கதையோடு விளையாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள். - படம்: செங்காங் நூலகம்
multi-img1 of 3

செங்காங் வட்டார நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை கதையோடு விளையாடு என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சி ( 7- 7.30pm) நடைபெறுகிறது.

திருவாட்டி ஷோபா குமரேசன் கதைசொல்லியாக வழிநடத்தும் இந்த நிகழ்ச்சியில், மார்ச் மாதம்(14/03/25) சுமார் 42 மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் அன்று சிறுவர்களோடு பெரியோர்களும் கதையை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

கதையை வாய்மொழியாக மட்டும் சொல்லாமல், படவில்லைகளை (PPT) காண்பித்து கூறியதோடு, அதைத் தொடர்ந்து சில உற்சாகமூட்டும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

முதலில் நடந்த கேள்வி - பதில் அங்கத்தில் சிறுவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கேற்ப அனைவரும் சரியான பதில் கொடுத்து அசத்தினர். அதைக் கண்டபோது கதையை அனைவரும் முழுவதுமாக உள்வாங்கியிருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

பிறகு அதைத் தொடர்ந்து நடிக்கலாம் வாங்க என்ற நடவடிக்கையில் 3 சிறுவர்கள் களமிறங்கி கதையில் உள்ள கதாமாந்தர்களாகவே மாறி நடித்துக் காட்டினர். அதற்கு அவர்களின் பெற்றோர்களும் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெற்றோர்- பிள்ளைகளுக்கிடையே நல்ல பிணைப்பு நேரத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர வேண்டும் என்றும் பெற்றோர் சிலர் தங்கள் கருத்தை பகிர்ந்துகொண்டனர்.

இந்த அங்கத்திற்கு தொண்டூழியராக திருவாட்டி கார்த்திகா ரவிச்சந்திரன் அவர்கள் கைகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்