மவுண்ட் பிளசண்ட் வட்டாரத்தில் சிறப்பான விளையாட்டுத் திடல் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அங்குதான் சிங்கப்பூரின் முதல் காவல்துறைப் பள்ளி இருந்தது. இதனால், அந்தப் பழைய இடத்தின் அடையாளம் இந்த விளையாட்டுத் திடலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
சாலையில் வழக்கமாகக் காணப்படும் போக்குவரத்துச் சின்னங்கள் இந்தத் திடலில் உள்ளன.
அத்துடன், இங்கு காவல்துறை வாகனம்போல காணப்படும் விளையாட்டு வாகனம் இருக்கும்.
சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தில் அடுக்குமாடிக் கட்டடக் குடியிருப்புகளில் வீவக விளையாட்டுத் திடல்கள் எளிமையாக இருக்கும்.
1960களில் சறுக்குப் பலகை, ஊஞ்சல், ‘சீ சா’ (see saw) எனப்படும் ஏற்ற இறக்கப் பலகை எனப் பிள்ளைகள் விளையாடுவதற்கு சில வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.
விளையாட்டுத் திடல்கள் 1970களிலும் 1980களிலும் விலங்குகள், பழங்கள் உள்ளிட்ட வடிவங்களில் அமைக்கப்பட்டன. இத்தகைய வடிவமைப்புகள், அன்றைய காலகட்டத்திற்குப் புதுமையாக இருந்தன.
தோ பாயோவிலுள்ள கடல்நாக விளையாட்டுத் திடலில் இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததைப் பெரியவர்கள் பலர் இன்றும் நினைவுகூர்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பிள்ளைகள் உல்லாசமாகவும் அதிக ஈடுபாட்டுடனும் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு முதல் புதிய வழிமுறைகள் பயன்படுத்தப்படும்.
பெற்றோர், பாலர் கல்வி ஆசிரியர்கள், சுகாதார நிபுணர்கள் ஆகியோர் இந்த வழிமுறைகளை வகுத்துள்ளனர்.
ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்ற விளையாட்டுகளால் பிள்ளைகளின் உடல் அசைவு, பலம், கைவினைத் திறன் ஆகியவை மேம்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
விளையாடுவதுடன் சிங்கப்பூரின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்ளும்போது நல்ல குடிமக்களாக நாம் திகழ முடியும்

