தித்திக்கும் பொங்கல் கொண்டாட்டங்கள் இந்திய மரபுடைமை நிலையத்தில் அடுத்த இரண்டு வார இறுதி நாள்களில் களைகட்டவுள்ளது.
வரும் ஜனவரி 10, 11, 17, 18ஆம் தேதிகளில் பெற்றோர், பிள்ளைகளுக்காக பற்பல சிறப்பு பொங்கல் நிகழ்ச்சிகள் இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற உள்ளன.
‘மொங்கல் திருடிய பொங்கல்’ எனும் சுவாரசியமான சிறுவர் கதை சொல்லும் அங்கம் சனிக்கிழமை (ஜனவரி 10) காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நிலையத்தில் நடைபெறும்.
மொங்கல் எனும் ராட்சதன் சூரியனைத் திருடிவிட்டான். அதனால் விவசாயிகள், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பொங்கல் திருநாளில் சூரியனின் பங்கு, எவ்வாறு சிறுவர்கள் சூரியனை மொங்கலிடமிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை.
இந்த அங்கம், பெற்றோர், பிள்ளைகள் இருதரப்பையும் ஈடுபடுத்தும். இந்த அங்கத்தை வழிநடத்துகிறார் ‘மொங்கல் திருடிய பொங்கல்’ நூலாசிரியர் அபி கிருஷ்.
ஒரு பெற்றோர்-பிள்ளை இணை பங்கேற்பாளர்களுக்குக் கட்டணம் $20.
அத்துடன், நான்கு வார இறுதி நாள்களுக்கு, சிறார்களுக்குச் சுறுசுறுப்பான நடவடிக்கைகள், விளையாட்டுகள், பொங்கல் திருநாள் பற்றிய பதாகைகளைக் காணலாம்.
கால்நடை பொம்மை உருவாக்குதல், பொங்கல் சாவிக்கொத்து, வண்ணம் தீட்டுதல் போன்ற இதர கைவினை நடவடிக்கைகளைச் சிறுவர்கள் அனுபவிக்கலாம். இலவச தின்பண்டங்கள் அளிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
2026ஆம் ஆண்டு இந்திய மரபுடைமை நிலையம் பொங்கல் கொண்டாட்டங்களில் இடம்பெறும் நிகழ்ச்சிகளைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் https://ihc-programmes.peatix.com/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

