தை பிறந்தால் வழி பிறக்கும்
ஜிங் ஷானே
ஆம் எங்கள் பள்ளியான
ஜிங் ஷானில் பொங்கல் கொண்டாட்டம்!
என்ன ஓர் ஆட்டம்!
இந்தக் கோலாகலமான நாளில்
பெரிய அறுவடை!
நாங்கள் சாப்பிட்டோம்
ருசியான வடை!
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சிக் கொத்தோடு
எறும்பூரும் கரும்போடு
எங்களைச் சுண்டி அழைத்தது
தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல்!
அழகில் திகழும் மஞ்சள் தோலினை
சுமந்த கொண்டைக் கடலையும்
எங்கள் நாவில் நர்த்தனம் ஆடியது!
உண்ட களைப்பு மாணவர்களுக்கு ஏற்பட
மாணவர்களின் ஓவியங்களில் கதிரவன் சிரிக்க
வகுப்பில் கோலங்கள் வண்ணமேற்று அலங்கரிக்க
மண்-மனிதர் அதோடு இயற்கையின் ஒற்றுமை
பொங்கலின் பொருளை விளக்க
உலகறியும் தமிழனின் களிப்பை
நாமும் பகிர்வோமாக என்று
முடித்தார் எங்கள் தமிழாசிரியை!
கேஷவ் அருண்
தொடக்கநிலை 6G
ஜிங் ஷான் தொடக்கப்பள்ளி

