பொங்கல் திருநாள்

1 mins read
10770b52-2b16-4452-bdb5-390eccff57c1
போகிப்பொங்கலன்று இந்தியாவில் வீட்டில் பழையப் பொருள்களை ஒன்றாகச் சேர்த்து எரிப்பார்கள். சிங்கப்பூரில் வேண்டாத பொருள்களை குப்பைகளில் போடுவார்கள். - படம்: செயற்கை நுண்ணறிவு

தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் மிகச் சிறப்பானது ‘பொங்கல்’ ஆகும். இதனைத் ‘தமிழர் திருநாள்’ என்றும் அழைப்பார்கள். இது நான்கு நாள்கள் கொண்டாடப்படும் மிகச் கோலாகலமான பண்டிகையாகும்.

முதல் நாள் - போகிப் பண்டிகை:

பொங்கல் விழாவின் முதல் நாள் போகி ஆகும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதே போகிப் பண்டிகையின் நோக்கமாகும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களையும் பழைய பொருள்களையும் நீக்கிப் புதிய சிந்தனையோடு வாழ்வதையே இது குறிக்கிறது.

இரண்டாம் நாள் - தைப் பொங்கல்:

இரண்டாம் நாள் தைப்பொங்கல் ஆகும். இது தை மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகிற்கு ஒளியும் பயிர்களுக்கு உயிரும் தரும் சூரியனுக்கு நன்றி செலுத்திப் பொங்கலிடும் நாள் இதுவாகும்.

பொங்கல் குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள்.
பொங்கல் குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். -

மூன்றாம் நாள் - மாட்டுப் பொங்கல்:

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் ஆகும். உழவர்களுக்குத் தோள் கொடுக்கும் காளைகளுக்கும் நன்மை தரும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நாள் அமைகிறது. அன்று மாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, பொங்கலிட்டு வணங்குவார்கள்.

மாட்டுக்கு மாலை அணிவித்து, அதற்கு பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள்.
மாட்டுக்கு மாலை அணிவித்து, அதற்கு பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள். -

நான்காம் நாள் - காணும் பொங்கல்:

நான்காம் நாள் காணும் பொங்கல் ஆகும். இதனைப் பெரியவர்கள் ‘கன்னிப் பொங்கல்’ என்றும் அழைப்பர். அன்று நம் உற்றார், உறவினர்களை நேரில் சந்தித்து, பெரியவர்களிடம் ஆசி பெற்று, பலவிதமான விளையாட்டுகளில் ஈடுபட்டு அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.

உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி உண்டு, மகிழ்வார்கள்.
உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி உண்டு, மகிழ்வார்கள். -

கெவின், தொடக்கநிலை 5, செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்