தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நூலகத்தில் பொங்கல் விழா

1 mins read
6e3b4bbc-dbbc-408a-961f-d24bbd14043b
பொங்கல் பற்றி சிறுவர்களுக்கு விளக்குகிறார். - படம்: குவீன்ஸ்டவுன் நூலகம்

அண்மையில் குவீன்ஸ்டவுன் நூலகத்தில் பொங்கல் சிறப்பு கதையாடல் நடைபெற்றது.

தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாடப்படுவதன் நோக்கம் பற்றியும் பொங்கலை ஒட்டிக் கொண்டாடப்படும் போகிப் பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் பற்றியும் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட்டது.

பாரம்பரிய உடைகள் அணிந்து சிறுவர்கள் வந்திருந்தார்கள். பொங்கலுக்குத் தேவையான பானை, விறகுகள், அரிசி, பருப்பு முதலிய பொருள்களைத் தொட்டுப் பார்த்து தெரிந்துகொண்டார்கள்.

மேலும் சமைத்த பொங்கலை வாழை இலையில் வைத்து அத்துடன் வெற்றிலை, பாக்கு, இஞ்சிக் கொத்து, மஞ்சள், தேங்காய், பழங்கள் ஆகியவற்றை வைத்து சூரியனுக்குப் படைப்பது பற்றியும் அறிந்துகொண்டார்கள்.

சிறுவர்களுடன் அவர்களுடைய பெற்றோரும் உற்சாகமாய் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கியது.

ப்ரியா கணேசன்

குறிப்புச் சொற்கள்