தைமகள் வந்தாள் மகிழ்ச்சி தந்தாள்! ‘பொங்கலோ பொங்கல்’ என முழங்கினோம்! சிங்கை மண்ணில் செம்மொழியில் இயற்கைக்கு நாம் நன்றி கூறுவோம்! தமிழர் திருநாளை எல்லோரும் ஒற்றுமையாகக் கொண்டாடுவோம்!
ஹம்மது ஸய்ட், தொடக்கநிலை 5
வண்ண வண்ணக் கோலமிட்டு விடியலைக் காணும் வேளையிலே கதிரவனை வணங்கிப் போற்றிடுவோம்! பானையில் பொங்கலிட்டு பால் பொங்க மகிழ்ச்சி பொங்க ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்கிடுவோம்!
உறவினர்களோடு ஒன்றுகூடி விருந்தினைப் பகிர்ந்துண்டு தித்திக்கும் கரும்பு உண்டு உழவர்களின் சிறப்பைப் போற்றும் உயரிய பண்டிகையாம் பொங்கல் திருநாள்!
அமிர்தலிங்கம் சிலம்பரசி ஆதிரை, தொடக்கநிலை 5
தை பிறந்தால் வழி பிறக்கும்! பொங்கல் வந்தால் மகிழ்ச்சி பொங்கும்! சூரியன், மாடு, உழவர் என அனைவர்க்கும் நன்றி சொல்வோம்! இனிய பொங்கல் திருநாள் - நம் எல்லோர் வீட்டிலும் மகிழ்ச்சி பொங்கும் நன்னாள்!
ஸ்ரீனிவாசன் ரக் ஷன் சாய், தொடக்கநிலை 5
பொங்கல் திருநாள் தமிழர்களின் மிக முக்கியமான பாரம்பரியத் திருநாளாகும். குறிப்பாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விழாவாகும். தை மாதத்தில் அறுவடைக்குப் பிறகு இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது இயற்கைக்கும் உழவர்களின் உழைப்பிற்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு சிறப்பான நாளாகும்.
கிரிஷவ் தினேஷ், தொடக்கநிலை 5
குதூகலத்துடன் கொண்டாடப்படும் பொங்கல்! வானளந்த தமிழினத்தின் தலையாயத் திருவிழா! அறிவியலும் மனித நேயமும் ஒருங்கே கொண்ட திருவிழா!
புது அரிசி, வெல்லம், பால் கலந்து பொங்க... தித்திக்கும் பொங்கல் போல் அனைவரது வாழ்வும் சிறக்கட்டும்! பொங்கலோ பொங்கல்!
வி. தன்வந்த், தொடக்கநிலை 6, செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி

