தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூச்சின் தொடக்கப்பள்ளியும் சூச்சின் பாலர் பள்ளியும் இணைந்து கொண்டாடிய பொங்கல்

2 mins read
c608cd1c-37fe-4b11-a0ec-97bac01a0e4e
பள்ளி மாணவர்கள் வரைந்த பொங்கல் பானைகள். - படம்: சூச்சின் தொடக்கப்பள்ளி

ஒன்றிணைத்த நன்னாள் பொங்கல்

பண்டிகைகள் என்றாலே குடும்பங்களை ஒன்று சேர்ப்பது. நமது தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் ஒரு பண்டிகை பொங்கல்.

நாம் உறவுகளுடன் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் பொங்கலை நான்கு நாள்கள் கொண்டாடி வருகிறோம். நம் நாட்டில் உறவுகள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாட வாய்ப்பில்லாவிட்டாலும் சமூக மன்றங்கள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதை மறுப்பதற்கில்லை.

நான்கு வகையான பொங்கலை நம் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். முதல் நாள் போகிப்பண்டிகை. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப போகியை முன்னோர்கள் வழிக் கொண்டாடி வருகிறோம்.

இரண்டாம் நாள் தைப்பொங்கல். தைப் பிறந்தால் வழிப்பிறக்கும் என்பது பழமொழி. அதற்கு ஏற்ப புதியதொரு நாளில் இயற்கைக்கு நன்றி கூறி வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல். விவசாயத்திற்குப் பக்கபலமாக நிற்கும் கால்நடைகளைப் போற்றும் நாள். கால்நடைகளைக் குளிப்பாட்டி மாலையிட்டு பொங்கல் வைத்து நன்றி கூறும் நாள். தமிழ்நாட்டில் சில இடங்களில் ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் வீர விளையாட்டு இன்று வரை விளையாடப்படுவதைக் காணமுடிகின்றது.

நான்காம் நாள் காணும் பொங்கல். உறவுகளைக் கண்டு நலம் விசாரிப்பதும் விருந்து உண்பதும் உண்டு. தமிழ்நாட்டில் பல இடங்களில் இளைஞர்கள் போட்டிகள் வைத்துப் பரிசுகளை வழங்குகின்றனர்.

பொங்கல் என்றவுடன் மனத்தில் மகிழ்ச்சி மட்டுமல்ல வாழ்க்கையில் இன்பமும் பொங்கும். இப்பண்டிகை நாளில் அனைவரும் உறவுகளோடு ஒன்றிணைந்து பொங்கலைக் கொண்டாடுவோம்.

லெ.கஷிகா 4A2, சூச்சின் தொடக்கப்பள்ளி.

“பொங்கல் நம் தமிழர்களின் பண்டிகை. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை பொங்கல் பண்டிகை. இப்பண்டிகை நன்றி கூறும் பண்டிகை”. ஆயிஷா 4A3

“நமது நாட்டில் உறவுகளோடு பொங்கல் கொண்டாட முடியாவிட்டாலும் சமூக மன்றங்கள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கின்றன. அங்கு வரும் நண்பர்களைச் சொந்தங்களாகக் கருதி கொண்டாடினேன்”. சய்லேஷ் 4A3

“மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு விளையாடுவதையும் அது நமது பாரம்பரிய விளையாட்டு என்பதையும் அறிந்தது புதிய செய்தியாக இருந்தது. ஹேமந்திரன் 4B1தொடக்கநிலை 5

சீனப்புத்தாண்டோடு பொங்கலையும் ஒப்பிட்டுப் பார்த்து வரைந்த படம்.

குறிப்புச் சொற்கள்