இயற்கை என்பது பெரிதாக விரிந்துள்ள மலைகளும் கடல்களும் மட்டுமின்றி, நாம் அன்றாடம் காணும் காய்கறிகள், இழை தழைகள், சின்னஞ்சிறு விலங்குகள் ஆகியவற்றிலும் உள்ளன.
பொங்கல் பண்டிகையிலுள்ள கலையம்சங்கள், பல்வேறு வண்ணங்களையும் வடிவங்களையும் காணத் தூண்டுகின்றன.
தொடக்கநிலை 5ல் பயிலும் ஆரபி, பொங்கலை ஒட்டிய வழக்கங்களைப் பாரம்பரியமாகப் பின்பற்றுபவர். பாவாடை அணிவது, கோலம் இடுவது ஆகியவற்றைச் செய்யும் மல்லிகா, அதில் இன்பம் காண்கிறார்.
“எனக்குப் பிடித்தது சர்க்கரைப் பொங்கலையும் கரும்பும் சாப்பிடுவது. வீட்டில் வளர்த்த கரும்பை முதன்முறையாகச் சாப்பிட்டேன். அது மிகவும் இனிப்பாக இருந்தது,” என்று ஆரபி கூறினார்.
கன்னிப் பொங்கல் அன்று சில வீடுகளில் செய்யப்படும் கணுப்பிடி என்ற வழக்கத்தையும் மல்லிகா செய்து பார்த்தார்.
“காக்காபிடி வைச்சேன், கணுப்பிடி வைச்சேன், காக்காக்கூட்டம் கலைஞ்சாலும் எங்கக் கூட்டம் கலையாமல் இருக்கணும்,” என்று கூவி, கணுப்பிடிகள் நிறைந்த இலை அவரது வீட்டில் படைக்கப்படும்.
குடும்ப ஒற்றுமையைப் போற்றும் வழமையாக இது பின்பற்றப்படுகிறது.
பொங்கல் பானையில் கட்டப்பட்ட மஞ்சள் செடியின் இலைகளில் கணுப்பிடி உருண்டைகள் வைக்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
தமது செல்லப்பிராணி முயல் இதனைச் சாப்பிடுவதைக் கண்டு மகிழ்வதாக ஆரபி கூறினார்.
அதேபோல, நவ்யா, நேத்ரா என்ற எட்டு வயது இரட்டைச் சகோதரிகளுக்கும் இந்தப் பொங்கல் சிறப்பாக இருந்தது.
வீட்டை அலங்கரிக்க உதவிய அவர்கள், மாவிலைகளில் சந்தனம், குங்குமம் இட்டனர். அவற்றை வாசலில் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தினர்.
பொங்கல் பானையில் கட்டப்படும் மஞ்சள் கொத்தையும் இந்தச் சகோதரிகள் தொட்டுப் பார்த்தனர். சிறப்பு என்னவென்றால், தங்களது வீட்டுத் தோட்டத்திலேயே மஞ்சளைப் பறித்துப் பயன்படுத்தினர். நவம்பர் முதல் வளர்க்கப்பட்ட மஞ்சள் செடி, பொங்கலுக்குப் பயன்படுத்தப்பட்டது.
விதவிதமான காய்கறிகளைச் சாப்பிடும் வாய்ப்பைப் பெற்ற அவர்கள், அதன் நன்மைகளைக் குறித்தும் காலப்போக்கில் அறிந்துகொள்வர் என எதிர்பார்க்கலாம்.

