சிறு வயதிலிருந்தே எப்படி காயமுற்ற விலங்குகளுக்கு முதலுதவி செய்வது போன்ற விஷயங்கள் பிள்ளைகளுக்கு ஒரு விலங்கியல் தோட்டப் பள்ளியின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கற்றுக்கொடுக்கப்பட்டது.
மண்டாய் வனவிலங்குக் குழுவுடன் என்டியுசி (First Campus) இணைந்து ஆசியாவின் முதல் விலங்கியல் தோட்டப் பள்ளியை அமைத்திருக்கிறது.
இந்தப் பள்ளியிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி மே 16ஆம் தேதியன்று, சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் My First Skool, Little Skool-House சேர்ந்த, ஏறத்தாழ 30 பாலர் பள்ளி மாணவர்கள் பங்குபெற்றனர்.
இப்பள்ளியில் இயற்கை மற்றும் வனவிலங்குகள் சார்ந்த ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் 3 முதல் 12 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு நடத்தப்படவுள்ளன. இந்த விலங்கியல் தோட்டப் பள்ளி ஜூன் மாதத்தின்போது பிள்ளைகளின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
இயற்கை மற்றும் விலங்குகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு உணர்த்துவதும் இப்பள்ளியின் முக்கிய நோக்கங்களாகும் என்று பள்ளி மேலாளர் திருமதி நெட்டலி டெங் தெரிவித்தார்.
‘இம்முயற்சியின் வழி பிள்ளைகள் இயற்கையுடனும் வனவிலங்குகளுடனும் வாழ்நாள் முழுவதும் தொடர்புடன் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.’ என்றார் மண்டாய் வனவிலங்கியல் குழுவின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, திருவாட்டி பெலினா லீ.
இந்தப் பள்ளியில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பிள்ளைகளுக்கு விலங்குகளின் இயல்புகள்,பழக்கங்கள், தன்னம்பிக்கை, குழுவுணர்வு போன்ற வாழ்க்கை திறன்கள் போன்றவற்றை மையமாக கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
விளையாட்டுகள்,படங்கள்,அட்டைகள், போன்றவற்றை பயன்படுத்தி பிள்ளைகளுக்கு எளிமையான முறையில் இயற்கை பற்றி கற்பிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பாலர் பள்ளி மாணவர்கள் ‘பெண்ணக்’ என்ற ஒரு வகையான நரிகளுக்கான உணவு வகைகளை தயார் செய்வது, அவற்றின் தன்மையைப் பற்றி கற்றுக்கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டனர்.
பாலர் பள்ளி மாணவர்கள் அந்த நரிகளுக்கு உணவு தயாரிப்பதையும் ஒட்டர் பொம்மைளுக்கு (shelter) உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் மிகவும் பிடித்திருந்தன என்று பகிர்ந்துகொண்டனர்.
அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பாலர் பள்ளி மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் பதிலளித்தனர்.