உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான்? அவன் யார்?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன?
கருப்பு நிறமுடையவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான். அவன் யார்?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது. அது என்ன?
உங்களுக்கு சொந்தமான ஒன்று; ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள். அது என்ன?
யாரும் செய்யாத கதவு; தானே திறக்கும்; தானே மூடும். அது என்ன?
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன?
தொடர்புடைய செய்திகள்
உணவை எடுப்பான்; ஆனால் உண்ணமாட்டான். அவன் யார்?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அவர் யார்?

