1. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான். அவன் யார்?
2. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
3. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
4. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
5. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
6. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கிப் போனது. அது என்ன?
7. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
8. யாரும் செய்யாத கதவு, தானே திறந்து மூடும் கதவு. அது என்ன?
தொடர்புடைய செய்திகள்
9. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
10. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
விடைகள்: வெங்காயம், கரும்பு, சூரியன், பூரி, வெண்டைக்காய், கண், முட்டை, கண் இமை, சிரிப்பு, பற்கள்

