அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் அறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர்.
ஒருமுறை பழைய புத்தகக் கடைக்குச் சென்றவர், அங்குள்ள புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
அங்கே அவர் எழுதிய நூல் ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
அதனைப் பிரித்துப் பார்த்தார் பெர்னார்ட் ஷா. அதில், நண்பரின் பெயரை எழுதி, அன்பளிப்பு என்று குறிப்பிட்டுக் கையெழுத்திட்டிருந்தார் பெர்னார்ட் ஷா.
ஆனால், நண்பரோ அதன் மதிப்பையும், அதில் புதைந்துள்ள அன்பின் ஆழத்தையும் அறியாதவராய் பழைய புத்தகக் கடையில் விற்றிருக்கிறார்.
அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கி, மீண்டும் அந்த நண்பரைச் சந்தித்து, ‘புதுப்பிக்கப்பட்ட நட்புடன்’ என்று எழுதி அதே புத்தகத்தைப் பரிசளித்தார் பெர்னார்ட் ஷா.
அதன்பிறகு அந்தப் புத்தகத்தின் மதிப்பை உணர்ந்த அந்த நண்பர், அதனைப் பொன்போல் மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
தனது இலக்கியப் படைப்பிற்காக நோபல் பரிசைப் பெற்ற பெர்னார்ட் ஷா, ஆஸ்கர் விருதினையும் பெற்றிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“இவ்வுலகத்தில் இருந்து தான் பெற்றதைவிட அதிகமாக யார் இந்த உலகத்துக்கு திருப்பிக் கொடுக்கின்றார்களோ, அவர்களே பண்புள்ள மனிதர்கள் ஆவர்,” என்று அவர் கூறியுள்ளார்.
அன்பளிப்பு
அன்பளிப்பு என்பது மனிதர்களுக்கு இடையே பாசத்தையும் நேசத்தையும் வளர்க்கும் என்பதால், அடிக்கடி பிறருக்கு அன்பளிப்பு வழங்குவது என்பது நல்லதொரு செயலாகும். -இமாஜான்