‘பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒருநாள் தாராவின் விலைமதிப்பற்ற பொம்மை திருடு போனது. அந்த பொம்மை இறந்துபோன அவளின் அம்மாவை நினைவுபடுத்தியதால் அதை மிகவும் நேசித்தாள்.
பொம்மை காணாமல் போனதால், மனம் உடைந்த தாரா, செய்தித்தாளில் படித்த பொம்மைகள் திருடப்படும் செய்தியை நினைத்து, அவளுடைய பொம்மையும் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தாள்.
அவளுக்கு அறிவியல் மீது இருந்த ஆர்வம் காரணமாக, ஒரு கண்காணிப்புக் கேமராவை உருவாக்கும் யோசனை தோன்றியது.
சந்தேகத்துக்கு இடமான முத்து என்ற ஒருவரை நினைத்து, தனது லபுபு பொம்மையைக் கொண்டு அவனைக் கண்காணிக்க முடிவு செய்தாள்.
மறுநாள் அவள் தன்னுடைய லபுபு பொம்மையை வீட்டு வாசலில் வைத்துவிட்டு கண்காணிக்கத் தொடங்கினாள்.
அவள் உருவாக்கிய கருவியின் உதவியுடன், முத்து தனது பொம்மையைத் திருடி, அவளது வீட்டு கிணற்றின் அருகில் இருந்த பாழடைந்த குழியில் மறைப்பதைக் காணொளி மூலம் கண்டுபிடித்தாள்.
உடனே சிறிதும் தாமதிக்காமல் அங்கு சென்று பார்த்தபோது, கிணற்றின் அருகில் இருந்த பாழடைந்த குழியில் அவளுடைய பொம்மையோடு பல பொம்மைகள் இருப்பதைக் கண்டுபிடித்தாள். உடனடியாக, காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்து முத்துவை கைது செய்ய உதவினாள்.
தாராவின் தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டி அவளுக்கு காவல் துறையினர் ஒரு கேடயத்தை வழங்கினர். அவளைப் பாராட்டி செய்தித்தாள்களில் செய்தி வெளிவந்தது.
தொடர்புடைய செய்திகள்
இழந்த தனது பொம்மையை மீண்டும் பெற்ற தாரா, தாயின் அன்பை மீண்டும் உணர்ந்தாள்.
இச்சம்பவம், “பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்ற பழமொழியை அவள் வாழ்வில் நிரூபித்தது.
S.J.அன்ஷிகா, உயர்நிலை 1, தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி (TKGS)