தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூச்சின் தொடக்கப்பள்ளியில் தாய்மொழி இருவார நடவடிக்கை

2 mins read
2e1980b4-ea9b-409a-814c-4ed6f4ff7c01
மாணவர்களுக்கு சூச்சின் பள்ளி தமிழ் ஆசிரியர் உணவுகள் பற்றி விளக்கம் அளிக்கிறார். - படம்: சூச்சின் தொடக்கப் பள்ளி

எங்கள் பள்ளியில் தாய்மொழி இருவார நடவடிக்கை இந்தத் தவணையில் சிறப்பாக நடந்தேறியது.

இந்த ஆண்டு கருப்பொருள் ‘உணவு’. அந்த உணவு அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.

மாணவர்களுக்கு உணவு என்றாலே அலாதி இன்பம். உணவு பற்றிய கண்காட்சிக் கூடத்தை அமைத்திருந்தோம்.

கண்காட்சிக் கூடத்தை விளக்கப்படுத்தவும் உணவுகளைப் பற்றி எடுத்துரைக்கவும் ஒவ்வொரு நாளும் மூன்று இனங்களைச் சேர்ந்த தாய்மொழி பேசும் பெற்றோர் வந்திருந்து விளக்கம் அளித்தனர்.

காட்சிக் கூடம் மூன்று மொழிகளிலும் மேலும் பொது மொழியாக ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருந்தன.

மாணவர்கள் கண்காட்சிக்கூடத்தைக் கண்டும் உணவுகள் பற்றியக் கதைகளைக் கேட்டும் அறிந்துகொண்டனர்.

மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த உணவுகளைப் பற்றிப் பேசவும் மற்ற இன நண்பர்களுடன் கலந்துரையாடவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவியாக இருந்தது.

மாணவர்கள் பல்லின பண்பாடு பற்றி அறிவதற்கும் அதனைத் தொடர்புப் படுத்திப் பேசுவதற்கும் இத்தளம் துணைபுரிந்தது.

மாணவர்களுக்கு இட்லியை நேரடியாக சுவைத்துப் பார்க்க வாய்ப்பளிக்கப்பட்டது.

மாணவர்கள் மூன்று இன உணவையும் இடைவேளை நேரத்தின்போது ருசித்துப் பார்த்து மகிழ்ந்தனர்.

மாணவர்கள் களிமண்ணைக்கொண்டு கையால் பல்வேறு உணவுகளை உருவாக்கி வந்ததோடு அந்த உணவிற்கு செய்முறை விளக்கமும் எழுதி வந்தனர்.

இந்தத் தாய்மொழி இருவார நடவடிக்கையில் மாணவர்கள் சீன, மலாய், இந்திய உணவுகளைப் பற்றியும் அவற்றுக்கிடையே இருக்கும் ஒற்றுமைகளை அறிந்து வியந்தும் போயினர்.

உணவு பயன்பாட்டுக்கு உரிய பொருள்களையும் உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களையும் பார்த்து சக நண்பர்களோடு பகிர்ந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்