1. விண் ஆய்வாளர்கள்: தி இன்ஃபினிட்
இந்த மெய்நிகர் (Virtual Reality) அனுபவம் மூலம், பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் மேல், அனைத்துலக விண்வெளி நிலையத்தைச் சுற்றிப் பாருங்கள்! விண்வெளி வீரர்களின் அன்றாட வாழ்க்கையை அனுபவியுங்கள், உணவு பகிர்ந்துண்ணுஙள்.
தேதி: அக்டோபர் 12ஆம் தேதி முதல்
நேரம்: காலை 10 முதல் மாலை 5 மணி வரை (திங்கள் முதல் வியாழன்)
காலை 10 முதல் இரவு 8 மணி வரை (வெள்ளி முதல் ஞாயிறு)
வயது: 9க்கு மேல்
இடம்: ‘அனெக்ஸ்’ மண்டபம் 2, 3
கட்டணம்: $32 (சிங்கப்பூர் அறிவியல் நிலைய நுழைவுச்சீட்டும் இதில் உள்ளடங்கும்.)
2. கண்காட்சி: நீங்கள் என்ன காண்கிறீர்கள்?
நம் கண்கள் எவ்வாறு வேலைசெய்கின்றன, ஏன் சிலர் வண்ணங்களை வேறுவிதமாகக் காண்கின்றனர் என தெரிந்துகொள்ளுங்கள்!
தொடர்புடைய செய்திகள்
தேதி: நவம்பர் வார இறுதிகள் (நவம்பர் 24 வரை)
நேரம்: காலை 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை
இடம்: கிட்ஸ்ஸ்டாப் (KidsSTOP™)
கட்டணம்: கிட்ஸ்டாப் நுழைவுச் சீட்டு இருந்தால் இலவசம்.
3. 2024 இளம் நீடித்த நிலைத்தன்மை வெற்றியாளர் கண்காட்சி
2024 இளம் நீடித்த நிலைத்தன்மை வெற்றியாளர் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகளைக் கண்டு மகிழுங்கள்!
தேதி: நவம்பர் 22, 2024
நேரம்: பிற்பகல் 1 முதல் 5.30 மணி வரை
இடம்: ‘அனெக்ஸ்’ மண்டபம் 1
கட்டணம்: அறிவியல் நிலைய நுழைவுச் சீட்டு இருந்தால் இலவசம்.