சாங்கி விமான நிலையத்தில் ‘ஸ்டார் வார்ஸ்’ குட்டி நூலகம்

1 mins read
1254bfb2-b5d6-417c-a2f2-b387c631dbb9
புத்தகங்களைச் சொந்தமாக அடுக்கும் தானியக்க இயந்திரம் - படம்: தேசிய நூலக வாரியம்

அட்டகாசமும் அற்புதமும் நிறைந்த ஸ்டார் வார்ஸ் குட்டி நூலகம், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆவலுடன் வரவேற்கிறது. 

சிங்கப்பூரின் முதல் ‘ஸ்டார் வார்ஸ்’ நூலகத்தில் உங்களுக்குப் பிடித்த ஸ்டார் வார்ஸ் புத்தகங்கள், கேலிச்சித்திர புத்தகங்கள் ஆகியவற்றை இரவல் வாங்கலாம். ஈராயிரத்துக்கும் அதிகமான புத்தங்களை நீங்கள் இங்கு பெறலாம்.

சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் இந்த நூலகம் உள்ளது. காலை 10 மணி முதல்  இரவு பத்து மணி வரை அது செயல்படுகிறது. 

‘ஸ்டார் வார்ஸ்’ உலகைப் போல, இங்கும் தானியக்க இயந்திரம் ஒன்று செயல்படுகிறது. மனிதர்களின் உதவி இல்லாமல் புத்தங்களை எடுத்து அடுக்குகிறது. கேட்ட நூலைத் தரவும் அதனால் முடிகிறது. 

இங்கிருந்து இரவல் பெறும் நூல்களை நீங்கள் மற்ற நூலகங்களிலும் திருப்பித் தரலாம். ‘ஸ்டார் வார்ஸ்’ பற்றிய உங்களது திறனையும் சோதிப்பதற்கான மின் திரைகளும் இந்த நூலகத்தில் உள்ளன.

காலத்தைக் கடத்தவேண்டாம். அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை இந்த நூலகம் இயங்குகிறது. வேறோர் உலகம் செல்லும் உணர்வை சிங்கப்பூரில் இருந்தபடியே பெறுங்கள். 

குறிப்புச் சொற்கள்