லெ லெக்கு இறுதிப் பிரியாவிடை

பள்ளி விடுமுறை காலம் இந்த மாதம் சற்று மாறுபட்டதாக அமைந்துள்ளது. மண்டாய் வனவிலங்கு குழுமத்தின் ரிவர் வொண்டர்ஸில் புதன்கிழமை காலை 1,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், லெ லெ பாண்டா குட்டியை இறுதியாகப் பார்க்கத் திரண்டனர்.

ஈராண்டுகளுக்கு முன்பு 200 கிராம் எடையுடன் சிங்கப்பூரில் பிறந்த லெ லெ 2024, ஜனவரி 16ஆம் தேதியன்று சிங்கப்பூரை விட்டு அதன் பூர்வீக இடமான சீனாவுக்குப் புறப்பட இருக்கிறது.

தற்போது 73 கிலோகிராம் எடையுடன் இருக்கும் லெ லெ சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் நான்கரை மணி நேர பயணம் மேற்கொண்டு சீனாவின் செங்டு நகரத்தைச் சென்றடையும்.

அதன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மண்டாய் வனவிலங்கு குழுமத்தைச் சேர்ந்த காப்பாளரும் கால்நடை மருத்துவரும் அதனுடன் பயணம் மேற்கொள்வார்கள்.

லெ லெவுக்காக விமான அறையின் தட்பவெப்ப நிலை 12 டிகிரி செல்சியஸிலிருந்து, 15 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும். அதற்கு 50 கிலோகிராம் மூங்கில் தண்டுகள், பழங்கள், தண்ணீர் ஆகியவை விமானத்தில் வழங்கப்படும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கஜேந்திரன் சொக்கையன், “நாங்கள் லெ லெ பாண்டா குட்டிக்கு மற்ற விலங்குகளுக்கு செய்வதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். சீனாவில் இருப்பவர்களையும் தொடர்புகொண்டு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. லெ லெ விமானத்தில் அது இருக்கப்போகும் கூடைக்கு நன்கு பழகிக்கொண்டது,” என்றார்.

புதன்கிழமை காலை ரிவர் வொண்டர்ஸில் பாண்டா குட்டிக்காகப் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று காலை பத்து மணியளவில், லெ லெ அதன் குகையிலிருந்து வெளியேறி செய்தியாளர்களைக் கண்காட்சிக் கூடத்தில் சந்தித்தது.

செய்தியாளர்கள் விறுவிறுப்புடன் புகைப்படங்களை எடுத்துகொண்டனர். பிரியாவிடை நிகழ்வுக்காக கண்காட்சி இடத்தில் லெ லெவுக்காக அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

மூங்கில் தண்டுகளால் நிரப்பட்ட கைப்பெட்டிகளை கண்ட லெ லெ அவற்றை ஆர்வத்துடன் கிழித்துப் பார்த்து அதிலிருந்த மூங்கில் தண்டுகளை வசதியான ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டு சுவைக்கத் தொடங்கியது.

அது ருசித்து உண்பதைப் பார்த்த சிறுவர்கள், பெரியவர்கள் மகிழ்ச்சியில் சிரித்து மகிழ்ந்தனர். லெ லெவைப் பார்க்க பொதுமக்கள் வரிசையில் பொறுமையாக காத்திருந்து பாண்டா குட்டிக்கு பிரியாவிடை அளித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!