புத்திகூர்மையுடன் செயல்பட்ட வௌவால்

புத்திகூர்மையுடன் செயல்பட்ட வௌவால்

2 mins read
339fdd65-cdec-4597-b3a0-f492355b55e1
படம் - படம்: ஊடகம்

ஒருநாள் மரத்தில் வௌவால் ஒன்று தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. தூக்கம் வந்ததால் கண்ணயர்ந்தது. அது தூக்கக் கலக்கத்தில் தன்னுடைய பிடியைத் தளர்த்தியது. தொப்பென்று கீழே விழுந்தது.

அப்போது அங்கு வந்த கரடி ஒன்று அந்த வௌவாலை இறுகப் பற்றியது. “நீ ஒரு கொழுத்த குட்டிப் பறவை. நான் உன்னை என்னுடைய இரவு உணவிற்கு விருந்தாக்கிக்கொள்ளப் போகிறேன்,” என்றது.

ஆஹா! நன்றாக மாட்டிக்கொண்டோமே! எப்படித் தப்பிப்பது? என்று சிறிது நேரம் யோசித்தது வௌவால்.

“ஐயா! எனக்கு இறக்கைகள் இருந்தாலும் என்னால் பறக்க முடியாது. நான் ஒரு எலி இனத்தைச் சேர்ந்தவன்,” என்று பணிவுடன் கூறியது.

அதைக் கேட்ட நீர்நாய், “எனக்கு பறவைதான் வேண்டும். எலி எனக்கு வேண்டாம்,” என்று கூறி வௌவாலை விடுவித்தது.

வௌவால் தப்பித்தோம், பிழைத்தோம் என்று நினைத்து அங்கிருந்து அகன்றது.

சில நாள்களுக்குப் பிறகு வௌவால் வசிக்கும் குகைக்குள் நீர்நாயின் நண்பன் ஒன்று வந்தது. அன்றும் வழக்கம்போல வௌவால் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்தது. உடனே கரடி வௌவாலை இறுகப் பிடித்தது.

“உன்னை நான் இன்று என்னுடைய உணவாக்கிக்கொள்ளப் போகிறேன். வெகு நாள்களாக உன்னைப்போன்ற ஓர் எலியை உண்ணவேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். என் நண்பன் என்னிடம் இந்த குகையில் ஒரு எலி இருக்கிறது என்று கூறியிருக்கிறான். மாட்டிக்கொண்டாயா?” என்றது நீர்நாய்.

இன்றும் இப்படி ஒரு நீர்நாயிடம் மாட்டிக்கொண்டேமே! இதனிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது வௌவால்.

உடனே, “ஐயா! நான் ஒரு சிறிய பறவை. நான் எலி அல்ல. வேண்டுமென்றால் என்னை விடுவித்து பாருங்கள். எனக்கு இறக்கை இருக்கிறது. என்னால் பறக்க முடியும்,” என்று கூறியது.

சந்தேகத்துடன் வௌவாலை கீழே விட்டது நீர்நாய். உடனே வௌவால் தன்னுடைய சிறகை படபட என்று அடித்து வானில் பறந்து சென்றது.

இந்த சின்ன பறவைக்கு எவ்வளவு தைரியம். என் கையில் இருக்கும்போது உயிர் போய்விடும் என்ற நிலை வந்தபோதும் கவலைப்படாமல் தைரியமாக என்னிடம் பேசி, என்னை யோசிக்கவிடாமல் முட்டாளாக்கிவிட்டு பறந்து சென்றுவிட்டதே என்று வருத்தத்துடன் தலைகுனிந்து சென்றது நீர்நாய்.

புத்திசாலியான வௌவால் ஆபத்து நேரத்தில் பயந்து தன்னுடைய உயிரை விடாமல் அறிவைப் பயன்படுத்தி அந்த நீர்நாய்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொண்டது.

நீதி: எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பயந்து, சோந்து விடாமல் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும் என்பதை வௌவால் உங்களுக்கு உணர்த்தி இருக்கும்.
குறிப்புச் சொற்கள்