சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் நிகழ்வுகள்

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் நிகழ்வுகள்

2 mins read
8fd2ad13-de7c-43ee-acf6-2acb56191c7e
சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் நிகழ்வுகள்  - படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம் 

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் மாணவர்களுக்கான பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

கொரிய நாட்டு பாடல்களையும் படங்களையும் விரும்பி பார்க்கும் மாணவர்களைக் கவரும் வகையில் ‘கொரியா ஃபெஸ்டிவல்’ எனும் நிகழ்வு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வரையிலும் அறிவியல் நிலையத்தின் ‘தி அந்நெக்ஸ்’ அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கான நுழைவுசீட்டு கட்டணம், நேரம் உட்பட இதர விவரங்களை

https://www.science.edu.sg/whats-on/korea-festival-singapore-2023 இணையப் பக்கத்தில் காணலாம்.

ஐந்து வயது மற்றும் அதற்கும் மேல் வயதுடைய சிறார்களுக்காக ‘எவரெஸ்ட் *ஸ்நொ சிட்டி’ அங்கம் பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரை ஆம்னி தியேட்டரிலும் ஸ்னோ சிட்டியிலும்(Omni Theatre & Snow City) நடைபெறும். இவ்வங்கத்தில் பார்வையாளர்கள் ‘எவரெஸ்ட்’ எனும் திரைப்படத்தை கண்ட பின்னர் பனி விளையாட்டிலும் (snow play activities) பம்பர் கார் சவாரியிலும்(bumper car ride) விளையாடலாம். இதற்கான கட்டணம் தலா ஒருவருக்கு 32 வெள்ளி ஆகும்.

எவரெஸ்ட் திரைப்படத்திற்கான நேரம் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணி, பிற்பகல் 2மணி என இரு நேரங்களில் இடம்பெறும். அதுபோல பனி விளையாட்டுகளும் பம்பர் கார் சவாரியும் ஒவ்வொரு நாளும் மதியம் 1 மணிக்கும் 3 மணிக்கும் நடைபெறும். மேல்விவரங்களை https://www.gevme.com/scsonlinetickets இணையதள முகவரியில் பெறலாம்.

‘கேலரி டெமோ: திஸ் இஸ் நாட் அ ஸ்டிக்’ எனும் அங்கத்தில் பார்வையாளர்கள் தனித்துவமான பல பூச்சிகளை பற்றியும் உயிரினங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அனைத்து வயதினரும் பங்குகொள்ளக்கூடிய இவ்வங்கம் ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரையுள்ள ஒவ்வொரு சனி, ஞாயிறு கிழமைகளிள் காலை 11 மணிக்கும் மதியம் 3 மணிக்கும் கிட்ஸ்டாப் க்ரைட்டர்ஸ் ரூமில் (KidsSTOP™ Critters Room) நடைபெறும்.

‘மீட் ஜூலியன்’ எனும் விளையாட்டு அங்கத்தில் எவரெஸ்ட் மலையேறி ஜூலியன் எனும் உருவ பொம்மையைக் கண்டு புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளலாம். ஜனவரி 27 தேதியில் ஆம்னி தியேட்டரில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும். இவ்வங்கத்தின் கட்டணம் தலா ஒருவருக்கு 14 வெள்ளி ஆகும்.

ஜனவரி 26ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் ‘சயின்ஸ் கஃபே’ எனும் அங்கத்தில் பார்வையாளர்கள் பல்லுயிர் சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கான கட்டணம் 18 வெள்ளி. மேல்விவரங்களை https://www.gevme.com/ScienceCafe இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

இவையல்லாமல் மேலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றை கீழுள்ள பட்டியலில் காணலாம்.

monolisa@sph.com.sg

குறிப்புச் சொற்கள்