சென்ற 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று என் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அந்தக் கொண்டாட்டத்தில் அலெக்ஸ்சான்டிரா தொடக்கப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் எங்களுடன் கலந்துகொண்டார்கள்.
கொண்டாட்டத்தின்போது, நம் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் அழகிய பாரம்பரிய உடைகள் அணிந்து பள்ளிக்கு வந்திருந்தார்கள். அவர்கள் மண் பானையில் பொங்கல் வைத்தார்கள்.
பொங்கலுக்குத் தேவையான பொருட்களைப் பற்றி மாணவர்களிடம் விளக்கியவாறு அவர்கள் பொங்கல் வைத்தனர். பால் பொங்கியபோது நாங்கள் எல்லோரும் ‘பொங்கலோ பொங்கல்!’ என்று கத்தி ஆரவாரம் செய்தோம்.
பிறகு நாங்கள் பல்லாங்குழி, பாண்டியாட்டம், நொண்டியாட்டம், தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தோம்.
விளையாட்டுகளை சக மாணவர்களுடன் விளையாடும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. இறுதியாக, எங்களுக்குப் பொங்கலைச் சுவைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பு கிட்டியது. பொங்கல் இனிப்பாகவும் சுவையாகவும் இருந்தது.
கொண்டாட்டத்தின்போது தாயம் விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்த அங்கமாகும். அதை விளையாட எளிதாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.
நாங்கள் அலெக்ஸ்சான்டிரா தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து இந்தப் பொங்கலை கொண்டாடியது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
ரிஸ்வான்
தொடர்புடைய செய்திகள்
தொடக்கநிலை 6, ஜங்ட தொடக்கப்பள்ளி

