பொங்கல் அன்று காலையில் எழுந்ததும் குளித்து புத்தாடை உடுத்தினோம். அதன் பின்னர் அண்டைவீட்டாருக்கு இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் சூரியன் உதிக்கும் பக்கம் அடுப்பு வைத்து பொங்கல் பொங்கினோம்.
உழவர்களுக்கு உதவும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவே இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று என் தந்தை கூறினார்.
பொங்கலைச் சாப்பிட்டுவிட்டு அன்றைய தினம் கோவிலுக்குச் சென்றோம்.
வீடு திரும்பியவுடன், என் தாத்தா கரும்பு வெட்டி தந்தார். ஒவ்வோர் ஆண்டும் நான் மண்பானை, மாட்டு வண்டி, கரும்பு போன்றவற்றை காகிதத்தையும் மற்ற பொருட்களையும் வைத்து செய்வேன்.
அது போலவே இந்த ஆண்டும் கரும்பு, பொங்கல் பானைகளை செய்து மகிழ்ந்தேன்.

