பொங்கல் கற்றல் பயணம்

கேஸ்வெரீனா தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த தொடக்கநிலை நான்கு மாணவர்கள் பொங்கல் கற்றல் பயணமாக லிட்டில் இந்தியாவிற்குச் சென்று வந்தனர்.

அன்று புதன்கிழமை. காற்று சிலு சிலு என்று வீசியது. சூரியன் பிரகாசமாக ஒளிவீசிக்கொண்டு இருந்தது. நாங்கள் நான்காம் வகுப்பில் படிக்கிறோம். எங்களுக்குப் பண்டிகைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

பொங்கலுக்கு லிட்டில் இந்தியா விழாக் கோலம் பூண்டிருந்தது. அன்றைய தினம் எங்கள் ஆசிரியர்கள் எங்களை கற்றல் பயணமாக லிட்டில் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றார்கள்.

அன்றைய தினம் பள்ளி முடிந்ததும் நாங்கள் பள்ளி உணவகத்தில் உணவு உண்டோம். அதன் பின்னர், நாங்கள் பள்ளி முகப்பில் ஒன்று கூடினோம். நாங்கள் அமைதியாக உட்கார்ந்து பேருந்துக்காகக் காத்திருந்தோம்.

பேருந்து வந்தது. பேருந்தில் நாங்கள் உற்சாகமாகப் பேசிக்கொண்டே லிட்டில் இந்தியாவிற்குச் சென்றோம். சிறிது நேரத்தில் நாங்கள் பொங்கல் சந்தையை அடைந்தோம்.

எங்களுக்குக் கால்நடைகளைப் பார்க்க ஆவலாக இருந்தது. அங்கே நாங்கள் ஆடு, மாடு முதலான கால்நடைகளைப் பார்த்தோம். அங்கே பண்ணையின் மணம் வீசியது.

கால்நடைகளைப் பார்த்துவிட்டு, நாங்கள் இந்தியப் பாரம்பரிய நடனமான கரகாட்டத்தைப் பார்த்தோம்.

சிலர் தலையில் கரகம் வைத்து, அதைக் கையால் பிடிக்காமல் கீழே விழுந்துவிடாமல் திறமையாக ஆடுவதைப் பார்த்து நாங்கள் கைதட்டி பாராட்டுத் தெரிவித்தோம்.

திடீரென்று, கனத்த மழை பெய்தது. இருப்பினும், நாங்கள் மழையைப் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம்.

பின்னர், ஒருவர் எங்களுக்கு நாட்டுப்புற இசைக்கருவிகளைப்பற்றி விளக்கினார். எங்களுக்குப் பறையையும் தவிலையும் வாசிக்க வாய்ப்பும் கிடைத்தது. அவை எழுப்பும் இசையைக் கேட்க நன்றாக இருந்தது.

அதன் பிறகு, எங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

நாங்கள் ‘உறியடித்தல்’ என்னும் விளையாட்டை விளையாடினோம். நாங்கள் வரிசையில் நின்று ஒவ்வொருவராகக் கண்ணைக் கட்டி ஒரு பானையை உறியால் அடிக்க முயற்சித்தோம். அது மிகவும் சவாலாக இருந்தது. எங்கள் தோழி வெற்றிகரமாகப் பானையை அடித்ததால் அவளுக்கு ஒரு மிட்டாய் பரிசாகக் கிடைத்தது. மாலை ஐந்து மணி ஆனது. பள்ளிக்குத் திரும்பும் நேரம் வந்தது.

நாங்கள் பொங்கலைப்பற்றிய புது தகவல்களைக் கற்றுக்கொண்டோம். அதை எண்ணி மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம். இந்த ஆண்டு எங்களுக்கு மறக்க முடியாத பொங்கலாக அமைந்தது. பொங்கலோ பொங்கல்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!